NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

Lip Balms: உதடு பட்டுப்போல இருக்க வேண்டுமா? இந்த லிப் பாம்களை பயன்படுத்துங்கள்!!

200 ரூபாய்க்கு குறைவான லிப் பாம்கள் சிலவற்றை பார்ப்போம்.

Lip Balms: உதடு பட்டுப்போல இருக்க வேண்டுமா?  இந்த லிப் பாம்களை பயன்படுத்துங்கள்!!

பருவ மாற்றத்தின் போதும் உதடுகளில் வறட்சி, கருமை போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது.வீடு,அலுவலகம் என எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்லக்கூடியது தான் லிப் பாம்.விலைக்குறைவான லிப் பாம்கள் சிலவற்றை பார்ப்போம்.இவை உங்கள் உதடுகளை மென்மையாக வைத்து கொள்ள உதவும் இருநூறு ரூபாய்க்கு குறைவான லிப் பாம்கள் இதோ!!

ஷியா பட்டர், கோகோ பட்டர், ரோஸ் எக்ஸ்ட்ராக்ட் மற்றும் SPF 25 ஆகியவை சேர்த்து செய்யப்படும் தயாரிக்கப்படும் இந்த Lotus Herbals Lip therapy, Velvety rose உதடுகளை ஈரப்பதத்துடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.இதன் விலை ரூபாய் 156 மட்டுமே.

Maybelline New York Baby lips பயன்படுத்தினால் உதடு பிங்க் நிறத்தில் அழகாக இருக்கும்.இதில் வைட்டமின் ஈ மற்றும் ஜோஜோபா ஆயிலின் நற்குணங்கள் இருக்கிறது.இதன் விலை ரூபாய் 166 மட்டுமே.

100 சதவிகிதம் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Biotique Merry Cherry லிப் பாம் மழைக்காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை போக்கும் தன்மை கொண்டது. இதன் விலை ரூபாய் 149 மட்டுமே.

தர்பூசணியின் நற்குணங்கள் மற்றும் ஃப்ளேவர் கொண்ட இந்த Lotus Herbals லிப் பாம் 8 மணி நேரம் உதட்டை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  இதன் விலை ரூபாய் 128 மட்டுமே.

Street Wear Apple Pie லிப் பாமில் வைட்டமின் ஈ, ஷியா பட்டர் மற்றும் SPF 15 ஆகியவற்றுடன் ஃப்ரூட்டி ஃப்ளேவர் இருக்கிறது.  இது உங்கள் உதட்டிற்கு அழகான நிறத்தை கொடுக்கும். இதன் விலை ரூபாய் 135 மட்டுமே.

ஜெல் பேஸ்டு ஃபார்முலா கொண்ட இந்த Wet N Wild Pout & shock Gel லிப் பாம் உதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். இதன் விலை ரூபாய் 194 மட்டுமே.

பழங்களின் நற்குணங்கள் அடங்கிய இந்த Nivea லிப் பாமில் Hydra IQ ஃபார்முலா இருப்பதால் உதட்டில் கருமை படராமல் பார்த்து கொள்வதோடு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதன் விலை ரூபாய் 148 மட்டுமே.

16 மணி நேரம் உதட்டை இரப்பதத்துடன் வைத்திருக்கும் இந்த Maybelline Baby lips பயன்படுத்தலாம். இந்த சிவப்பு நிற லிப் பாம் உதட்டையும் அழகாக வைத்திருக்கும். இதன் விலை ருபாய் 139 மட்டுமே.

மாதுளையின் நன்மைகள் நிறைந்த இந்த Organic Harvest லிப் பாம் பயன்படுத்தலாம். இது முழுக்க முழுக்க ஆர்கானிக் தன்மை கொண்டது. இதில் பாராபின் மற்றும் மினரல் ஆயில் போன்றவை சேர்க்கப்படாமல் இருக்கிறது. இதன் விலை ரூபாய் 149 மட்டுமே.

Comments

SPF 15 கொண்ட இந்த Lakme Lip Love Chapstick லிப் பாம் 22 மணி நேரம் உதட்டை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  இதன் விலை ரூபாய் 135 மட்டுமே. 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT