NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

நாவூறும் ப்ரெட் ஸ்நாக்ஸ்

வீட்டிலேயே எளிதில் கிடைக்ககூடிய பொருட்களை வைத்து எப்படி ஸ்நாக்ஸ் செய்வதென்பதைப் பார்ப்போம்

நாவூறும் ப்ரெட் ஸ்நாக்ஸ்

மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்கக்கூடுமா? சூடான டீயுடன் பக்கோடா, சுண்டல், முறுக்கு, பப்ஸ், ஐஸ்கிரீம், புட்டிங் போன்றவை தான் பெரும்பாலான தேர்வாக இருக்கக்கூடும். இவற்றை கடைகளில் வாங்கி சாப்பிடும்போது கூடவே கிருமிகளையும் நோய்களையும் சேர்த்து தான் வாங்குகிறோம். அதனால், வீட்டிலேயே எளிதில் கிடைக்ககூடிய பொருட்களை வைத்து எப்படி ஸ்நாக்ஸ் செய்வதென்பதைப் பார்ப்போம்.

1. ப்ரெட் டார்ட்லெட்ஸ்

விருந்தினர்கள் அல்லது நண்பர்கள் வருகையை நீங்கள் எதிர்பாராத போது, உடனடியாக எளிதில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வகையில் மிகவும் எளிமையானது இந்த ப்ரெட் டார்லெட்ஸ். கண்கவரும் வகையில் இருப்பதோடு ருசியிலும் பிரமாதமாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த மற்றும் எளிமையான பொருட்களை பயன்படுத்தி தயார் செய்யலாம். பிரட்டை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி கொள்ளுங்கள். வெண்ணெய் தடவி 150 டிகிரி செல்சியஷில் 5 நிமிடங்கள் வேக வைத்து, பின் அதில் உங்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து மீண்டும் மொருமொருப்பாக பொன்னிறமாகும் வரை வைத்து எடுக்கவும்.

2. ப்ரெட் ரோல்ஸ்

ப்ரெட்டை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி கொள்ளுங்கள். லேசாக தண்ணீரில் நனைத்து எடுங்கள். இதனால் ப்ரெட் மென்மையாக மாறும். மேலும் அதில் ஏற்கனவே வேகவைத்த உருளைக்கிழங்கு, கறி, காய்கறிகள் போன்றவற்றை வைத்து ரோல் செய்து பொன்னிறத்தில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

3. மினி பீட்சா

Comments

வீட்டிலேயே எளிமையாக ப்ரெட்டை வைத்து பீட்சா செய்யலாம். பிரட்டின் ஓரங்களை வெட்டி, சீஸ் தடவி ஒன்றின்மீது ஒன்று வைத்து அதன் மேல் தக்காளி சாஸ் தடவி அதன் மேல் சீஸ் மற்றும் உங்களுத்த பிடித்தவற்றை மேல் தூவி அதனை மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்யவும். பொன்னிறமாக வரும் வரை வைத்து எடுத்து சூடாக சாப்பிட ருசி அற்புதமாக இருக்கும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT