NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

உடல் எடையை அதிகரிக்கும் 3 டயட் உணவுகள்

உடல் எடையை குறைக்க நம்மில் பலரும் பாடுபடுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும்

உடல் எடையை அதிகரிக்கும் 3 டயட் உணவுகள்

உடல் எடையை குறைக்க நம்மில் பலரும் பாடுபடுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடல் எடையை அதிகரிக்கவும் அல்லது குறைக்கவும் வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருங்கள். மார்க்கெட்களில் கிடைக்ககூடிய உடல் எடை குறைப்பு பானங்கள், சூப்கள், ப்ரோட்டீன் பார் போன்றவற்றில் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்படுவதனால் உடலில் எதிர்வினையாற்றி உடல் எடையை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. க்ரானோலா

ஹெல்தி பார் வகைகளில் ஒன்றுதான் இந்த க்ரானோலா. உடல் எடை குறைப்பில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸ், நட்ஸ், சர்க்கரை, எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இதில் சர்க்கரையின் அளவு தான் அதிகம். ஆக, இது நிச்சயம் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. அதிகபடியாக இனிப்பு உடல் பருமனை உண்டாக்கும். டயட்டில் இருப்பவர்கள் இதை சாப்பிடும்போது உடல் எடை கூடுமே தவிர குறையாது. அதனால், இதனை தவிர்த்திடுங்கள்.

2. சாலட்

பச்சை காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சாலட் உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுத்து உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆனால் சில இடங்களில் சாலட்களை அழங்கரிக்க அத்துடன் சில சாஸ் மற்றும் சாக்லேட் கேக் போன்றவற்றை சேர்த்து கொடுக்கின்றனர். வெறும் சாலட்டில் 400-600 கலோரிகள் இருக்குமென்றால் இந்த சாக்லேட் கேக்கில் மட்டுமே 370- 400 கலோரிகள் இருக்கின்றது. இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலில் கலோரிகள் அதிகரித்து உடல் எடை கூடும். அதனால், வீட்டிலேயே கீரைகள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ரெட் ஒயின் வினிகர் சேர்த்து சாலட் செய்து சாப்பிடுங்கள்.

3. டயட் சோடா

Comments

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வழக்கமாக நீங்கள் குடிக்கும் கோக்கை விடுத்து டயட் கோக்கிற்கு மாறியிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஏனென்றால், இந்த டயட் சோடா உங்கள் வயறு மற்றும் இடுப்பு பகுதியில் மூன்று மடங்கு கொழுப்பு சேர்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூக்கிகள் மூளை செயல்பாட்டில் மாற்றத்தை உண்டாக்கி அந்த சுவைக்கு அடிமைப்படுத்திவிடுகிறது. உடல் எடை குறைய டயட் சோடாவை தவிர்ப்பதே சிறந்தது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT