NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

'சோலோ டேட்டிங்' போயிருக்கீங்களா?

சோலோ டேட்டிங் செல்வதினால், நம்மை நாம் புரிந்து கொண்டு, நமக்கான உண்மைகளை வரையறைக்குள் வைத்து கொள்ள உதவும்

டேட்டிங் என்பதன் பொருளே சம காலத்தில் மாறி வருகிறது. பொறுமையாக சிலவற்றை அனுபவிக்க, யோசிக்க நமக்கு நேரம் இல்லை. எனவே, இப்போதெல்லாம் டேட்டிங் சென்றால் கூட, நம்மை முழுவதுமாய் மறந்து விட்டு, நம் டேட்டிங் நண்பருக்காக முழுவதுமாய் நம்மை மாற்றிக்கொள்கிறோம். எனவே, சோலோ டேட்டிங் எனப்படும், தனக்கான நேரத்தை செலவிடுவது முறை பிரபலமாகி வருகிறது.
நண்பர்கள் மற்றும் பிறருடனான டேட்டிங் செல்வதற்கு முன்னர், சோலோ டேட்டிங் செல்வதினால், நம்மை நாம் புரிந்து கொண்டு, நமக்கான உண்மைகளை வரையறைக்குள் வைத்து கொள்ள உதவும். இதனால், பிறருடன் டேட்டிங் செல்லும் போது, உங்களின் நிஜ தோற்றத்தை, பெரிதாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
உங்களை மேம்படுத்தும்


தனக்கான நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி, எது தனக்கு தேவையானது? தேவையற்றது என யோசித்து முடிவெடுக்கும் போதும், மனதார தன்னை புரிந்து கொள்வதும், ‘நான் இப்படித்தான்’ என்று தன்னை முழுமையாக நேசிப்பதும், ரசிப்பதும்தான் ஒருவருக்கு தைரியத்தை வரவைக்கும். தனக்கான நேரம் என்பது, பணிக்கு சேர்ந்து முதல் மாத வருமானத்தை கையில் கொண்டு, இனி நான் என்னை தவிர வேற யாரையும் சார்ந்து இருக்க தேவையில்லை என தெரிய வரும் போது இருகின்ற மனநிலையை அடைவீர்கள்.
நீங்கள் யார் என அறிந்து கொள்ளலாம்
சில சமயகங்களில், இந்த உலகில் என்னைப் புரிந்த கொண்டவர்கள் யார்? என்ற கேள்வி எழும். ஆனால், அதை விட முக்கியமானது, நான் என்னை புரிந்து வைத்திருக்கிறேனா? என்பதுதான். தனியான நேரங்களில், உங்களுடைய நிஜம் வெளிவரும். ‘நான் இப்படியா?’ என நீங்கள் உங்களை புரிந்து கொள்வீர்கள். இது வாழ்க்கை பயணங்களில் மிக முக்கியமான ஒன்று.
Commentsவேடிக்கை நேரம்
உங்களுக்கென்று சமைத்து, அதை சரிவர செய்யாது மகிழ்ந்திருக்கிறீர்களா? தனியாக பயணம் சென்று... உங்களைத் தொலைந்து மீண்டும் கண்டெடுத்து வந்திருக்கிறீர்களா? ஊர் சுற்றியுள்ளீர்களா? இவை அனைத்தும் செய்வது அவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுத்தரும். புதியவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.




அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT