NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ஆலப்புழாவில் மிஸ் செய்யக்கூடாத 3 விஷயங்கள்!

படகில் இருந்து ரசித்துக் கொண்டே செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஆலப்புழாவில் மிஸ் செய்யக்கூடாத 3 விஷயங்கள்!

ஆலப்புழா… அலப்பி எனவும் அழைக்கப்படுகிறது. இது கேரளாவில் அமைந்திருக்கும் நகரங்களில் பிரதானமானது. தென் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக இருக்கும் இதன் நீர்ப்பரப்பு, கடற்கரை, நெல் வயல், அழகிய தெருக்கள் நிறைந்த சாலை என ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. அதுவும் சொகுசான அனுபவத்தைத் தரும் ஹவுஸ் போட் பற்றிச் சொல்வதற்கு வார்த்தைகளே போதாது! எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலப்புழாவில் தவற விடக்கூடாத முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

நீர்ப்பரப்பில் படகுப்பயணம்

ஆலப்புழாவின் அழகை பார்ப்பதற்கு, படகுப் பயணமே சிறந்தது. கரையில் தென்னை மரங்கள், ஆற்றுப்படுகை, தோப்புகள் நிறைந்த பசுமையான காட்சியை உள்வாங்கிக் கொண்டே, படகில் ரிலாக்ஸாக அமர்ந்து செல்லும் போது மனதுக்குள் குதூகல ஊற்றுப் பிறக்கும்! அதுவும் பச்சை பசேலென்ற இலைகள், நீல நிற வானம் ஆகியவற்றுடன் சூரிய அஸ்தமனத்தை படகில் இருந்து ரசித்துக் கொண்டே செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on

உள்ளூர் உணவு

படகுப் பயணம் செய்யும் போது, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் காலை மற்றும் மதிய உணவை படகிலேயே உண்ண வேண்டிய சூழல் ஏற்படலாம். அதைப் பெரும்பாலும் படகோட்டியின் மனைவியே சமைத்துத் தருவார்! சுவையான உள்ளூர் உணவைச் சாப்பிடக்கூடிய வாய்ப்புடன், நமக்கு அந்தச் சாமானியனின் வாழ்க்கை அனுபவமும் அன்பும் ஒரு சேரக் கிடைக்கும். அதுவும் ஆலப்புழா நகர வீதிகளில் ஆங்காங்கே கிடைக்கக்கூடிய சிற்றுண்டிகளைத் தவறவிட வேண்டாம்!

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on

கடற்கரை

கேரளாவில் இருக்கும் கடற்கரையில், ஆலப்புழாவில் இருப்பதே சிறந்த ஒன்று. ஆம், இவை சுத்தமாக இருப்பதுடன், காலாற நடந்துச் செல்லவோ அல்லது ஆசுவாசமாக உட்கார்ந்து இளைப்பாறவோ ஏதுவான இடமாக இருக்கும். ஒருவேளை இங்கே கூட்டமாக இருந்தால், ஆலப்புழாவுக்கு அருகே இருக்கும் மராரி கடற்கரைக்குச் செல்லலாம். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, பெற்றோர்/நண்பர்/காதலி/மனைவி என யாருடன் வேண்டுமானாலும் சென்று வருவதற்கு மிகப் பொருத்தமான இடம் இந்த ஆலப்புழா!

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT