NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ப்ரேக் அப்பில் இருந்து வெளியேற மூன்று வழிகள்

காதலை கடப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அந்த பிரிவின் தாக்கம் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டி போடலாம்

ப்ரேக் அப்பில் இருந்து வெளியேற மூன்று வழிகள்

காதலை கடப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அந்த பிரிவின் தாக்கம் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டி போடலாம். பெரும்பாலான நேரம் ஒருவரின் சிந்தனை நம்மை ஆட்கொண்டிருந்தால் வேறு எதிலுமே நம் கவனத்தை செலுத்த முடியாமல் மனம் அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். உயிரினும் மேலாக நேசித்தவரின் பிரிவானது நம் வாழ்வில் வெறுமையை ஏற்படுத்தும். அவருக்கான இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும், இந்த வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் நிச்சயம் தோன்றும். அந்த உணர்வு பெரும் ரணத்தை தர வல்லது. பிரிவிற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடைவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் நிதானமாக சிந்திக்க வேண்டும். துயரில்லாத பிரிவில்லை என்பதால் அதனை கடக்க உதவும் மூன்று வழிகள் உங்களுக்காக.

1. உங்கள் உறவை பற்றி பிறரிடம் பேசுங்கள்

தொடர்ச்சியாக உங்கள் உறவை பற்றியும், நீங்கள் அடையும் வேதனையையும் பிறரிடம் பேசுவதாலோ அழுவதாலோ உங்களுக்கு எந்த பயனும் இல்லை. அது மேலும் உங்களை பலவீனமாக்கும். அதனால், உங்கள் பிரிவுக்கு பின்னான காரணங்கள் என்ன, இந்த முடிவு சரியானதா இல்லையா என்று யோசியுங்கள். நீங்கள் உடைந்து போகும் நேரத்தில் உங்களிடம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள். மனதை ஆற்றுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அல்லது உங்கள் நண்பர்களிடத்தில், உங்கள் உறவை பற்றி அவர்களின் கண்ணோட்டம் என்ன என்றும், எது உங்களுக்கு சரியானதாக அவர்கள் கருதுகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆலோசனை நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், உங்களுக்கு ஒரு தெளிவை பிறப்பித்து அந்த துயரில் இருந்து மீண்டு வர செய்யும்.


2. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு நாளின் பெரும்பகுதியை உங்கள் துணையுடன் இருந்தே வீணாகியிருக்கும். உணவு, உறக்கம், பொழுதுபோக்கு, வேலை, நண்பர்கள் என எல்லாவற்றையும் மறந்து காதலில் மிதந்து கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால், காதலின் பிரிவுக்கு பின், தற்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அவற்றை நீங்கள் மிகவும் பயனுள்ளதாக்கவும். வாசிப்பை அதிகரித்தல், நடனம், விளையாட்டு மற்றும் இசை என எதிலாவது உங்கள் கவனத்தை முழுமையாக செலுத்துங்கள். உங்கள் ஆற்றல் முழுவதையும் கற்றலில் பயன்படுத்துங்கள். உங்களை உற்சாகமூட்டும் செயல்களை செய்ய தவற வேண்டாம்.

3. உங்கள் உறவை பற்றி பேசுங்கள்

நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்
உங்கள் காதலன்/ காதலியுடன் நேரத்தை ஒதுக்குவதில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான மகிழ்வான தருணங்களை இழந்திருக்கக்கூடும். அவற்றை மீட்டெடுக்கும் அவகாசமாய் இந்த பிரிவை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களை நேசிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குவதால், உங்கள் மனநிலை முன்னேற்றம் அடைவதோடு, அவர்களும் மகிழ்ந்திருப்பர். உங்கள் நண்பர்களுடன் அல்லது உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றலாம். ப்ரேக் அப் என்பதால், ஒரே இடத்தில் படுத்து, மீண்டும் மீண்டும் ஏதோ சிந்தனைகளை அசைப்போட்டு கொண்டிருக்காமல், உங்களை மகிழ்விப்பவை அனைத்திலும் ஈடுபடலாம்.

Comments


 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT