NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் மாம்பழங்கள்!

சாப்பிட்டு சுவைக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காவும் மட்டுமல்ல சரும அழகுக்கும் தலைமுடி பராமரிப்புக்கும் கூட மாம்பழம் மிகவும் பயனுள்ள பழமாக உள்ளது

சுவைத்து சாப்பிடுவதற்கு மட்டுமல்ல மாம்பழங்களின் பயன்கள் இன்னும் நிறையவே உள்ளன.
கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசனும் வந்துவிட்டது என்று தான் அர்த்தம். பழங்களின் அரசனாகக் கருதப்படும் மாம்பழங்களின் பயன்கள் ஏராளம். சாப்பிட்டு சுவைக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காவும் மட்டுமல்ல சரும அழகுக்கும் தலைமுடி பராமரிப்புக்கும் கூட மாம்பழம் மிகவும் பயனுள்ள பழமாக உள்ளது.
சரும ஆரோக்கியம்


முகத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கும் சக்தி மாம்பழத்துக்கு உண்டு. காய்ந்த மாம்பழத் தோல் பவுடர் உடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடத்துக்குப் பின் கழுவவும்.
முகப்பராமரிப்பு
மாம்பழக் கூழுடன் சிறிது அலவு தயிர், கோதுமை மாவு சேர்த்து முக கழுவும் கலவை ஆகப் பயன்படுத்தலாம். இதேபோல், மாம்பழக் கூழுடன் பாதாம் தூள், பால் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
Commentsதலை முடிக்கான பராமரிப்பு
மாம்பழக் கூழுடன் சிறிது அளவு தயிர், 2 முட்டைகளின் வெள்ளைக் கரு சேர்த்து 30 நிமிடங்களுக்கு தலையில் தேய்த்து குளித்து வரலாம். இது தலைமுடியை ந்ல்ல ஆரோக்கியமாக வலுவாகவும், கருப்பாகவும் வைத்திருக்க உதவும்.




அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT