NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

மூணாரில் நீங்கள் தவற விடக்கூடாத 4 விஷயங்கள்

ஜோடியாக வருபவர்களுக்கு மட்டுமல்லாது, பயணத்தில் ஆர்வம் மிக்கவர்களுக்கும், தனியே பயணிப்பவர்களுக்கும் கூட நிச்சயம் இந்த அழகிய மலைப்பகுதி பேரின்பத்தை அள்ளித் தருவதாய் இருக்கும்

பேரின்பத்தை அள்ளித் தரும் அழகிய மலைப்பகுதி.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரம் தான் மூணார். தென்னிந்திய மலைப்பகுதிகளில் மூணாருக்கு முக்கிய இடம் உண்டு. கொச்சியில் இருந்து ஐந்து மணி நேரம் பயணம் செய்தால் போதும். அந்த அழகிய நகரத்தை சென்றடைந்து விடலாம். இயற்கை எழில் கொஞ்சும் மூணார் தென்னகத்து காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியை பிரதானமாக கொண்ட இவ்விடத்தில் தரமான வாசனை மற்றும் மசாலா பொருட்களும் கிடைக்கும். இங்கிருக்கும் இயற்கையின் அழகு உங்கள் கண்களுக்கு விருந்தளித்து, ஆத்ம ரீதியான மகிழ்ச்சியை தரக்கூடியதாய் இருக்கிறது. ஜோடியாக வருபவர்களுக்கு மட்டுமல்லாது, பயணத்தில் ஆர்வம் மிக்கவர்களுக்கும், தனியே பயணிப்பவர்களுக்கும் கூட நிச்சயம் இந்த அழகிய மலைப்பகுதி பேரின்பத்தை அள்ளித் தருவதாய் இருக்கும்.

தேயிலை மற்றும் மேகங்களை காணலாம்

மூணார் தேயிலை தோட்டங்களுக்கு பெயர் போனது. இங்கு உற்பத்தியாகும் தேயிலை உலக புகழ் பெற்றது. எங்கும் பச்சைப்பசேல் என்று இருக்கக்கூடிய தேயிலை தோட்டங்களை காணாமல் நீங்கள் மூணாரை விட்டு வெளியேற முடியாது. மலை உச்சியை நோக்கி நீங்கள் செல்ல செல்ல, கொஞ்சி விளையாடும் முகில்கள் உங்களை கடந்து செல்வதை பார்க்கலாம். மேகங்களுக்கு நடுவில் நின்று நீங்கள் பிரமித்து போயிருப்பீர்கள்.

 

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on

குண்டலா ஏரி

இந்தியாவில் உள்ள சுத்தமான தண்ணீர் நிறைந்த ஏரிகளுள் ஒன்று தான் மூணாரில் இருக்கக்கூடிய குண்டலா ஏரி. கண்ணுக்கினிய காட்சிகளை அளிப்பதோடு மட்டுமில்லாமல், இயற்கையின் அரவணைப்பையும் கொடுக்கிறது. இங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசிக்கலாம், ஒரு குட்டி தூக்கம் போடலாம் அல்லது இயற்கையின் அழகை ரசித்தபடியே மெய்மறந்து போயிருக்கலாம். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் உங்கள் பாதங்களை அந்த சுத்தமான மற்றும் குளிர்ந்த தண்ணீரில் நனைக்க தவறாதீர்கள்.

 

A post shared by Ashish Dutta (@theyellowthread) on
 

தேயிலை தொழிற்சாலை

தேயிலை தொழிற்சாலையை சுற்றிப் பார்ப்பது என்பது புதுமையான அனுபவமாக இருக்கும். தேயிலை தோட்டத்து ரிசார்ட்டில் தங்கி தேயிலை தோட்டத்தை சுத்தி பார்த்து, தேநீரை ருசித்து மகிழுங்கள்.
 

டீத்தூள் மற்றும் மசாலா பொருட்களை வாங்கலாம்

மலைப்பகுதிகளுக்கு செல்லும்போது நிச்சயம் டீத்தூள், காபித்தூள், மிளகு, பட்டை மற்றும் ஏலக்காய் போன்றவற்றை வாங்க தவற வேண்டாம். மூணாரின் இயற்கை அழகையும், குளிர் காற்றையும், அழகிய ஏரிகளையும், மலைகளையும் ரசித்து வாருங்கள்.


Well, next time you are in Kerala.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com