NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

சத்துக்களை முழுமையாக பெற 5 வழிகள்

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைத்துவிடுவதில்லை

சத்துக்களை முழுமையாக பெற 5 வழிகள்

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைத்துவிடுவதில்லை. இதற்கு நாம் சமைக்கும் முறையும் ஒரு காரணம்தான். எண்ணெயில் பொறித்தல், வறுத்தல் போன்றவற்றில் ஒரு சத்தும் இல்லை. உங்களுக்கு பிடித்த உணவிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அப்படியே கிடைப்பதற்கான எளிய குறிப்புகள் உங்களுக்காகவே பரிந்துரைக்கிறோம்.

1. போச்சிங்

அடுப்பை சிம்மில் வைத்து சிறிதளவு தண்ணீரில் மீன், இறைச்சி, முட்டை மற்றும் பழங்களை வேக வைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள சத்துக்கள் அப்படியே நமக்கு கிடைக்கும். தண்ணீரில் வேக வைப்பதால் அதில் கூடுதலாக கொழுப்பு சேராமல் முற்றிலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

2. ஸ்மூத்தீஸ்

காய்கறி மற்றும் பழச்சாறுகளில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் இவற்றை அரைத்து வடிகட்டும்போது அதில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சர்க்கரை மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கிறது. அதனால், காய்கறி மற்றும் பழங்களை அரைத்து வடிக்கட்டாமல் அப்படியே கெட்டியாக குடிக்க முயற்சியுங்கள். இதனால் உங்களுக்கு அதன் சத்து முழுவதுமாக கிடைக்கும்.

3. தோல் நீக்க வேண்டாம்

பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலில் தான் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்திருக்கிறது. தோலை நீக்குவதால் பாதி சத்தை இழந்து விடுகிறோம். காய்கறிகளின் முழு சத்துக்களையும் பெற தோல் நீக்காமல் அதனை வேகவைத்து அல்லது க்ரில் செய்து சாப்பிடலாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தண்ணீரில் நன்கு கழுவ தவற வேண்டாம்.

4. க்ரில் செய்து சாப்பிடலாம்

உங்கள் உணவை நீங்கள் க்ரில் செய்வதன் மூலம் அதில் வைட்டமின், மினரல் மற்றும் ஊட்டச்சத்துக்களை தக்க வைக்க முடியும். மேலும் இப்படி சமைக்கும்போது, கூடுதலாக, எண்ணெய் சேர்க்க தேவையில்லை. உணவு பொருட்களில் இயற்கையாக உள்ள கொழுப்பே அதில் தங்கி உணவின் ருசியை அதிகரிக்கும்.

5. சரியான முறையில் வேக வைக்க வேண்டும்

Comments

காய்கறிகளை குக்கரில் வேகவைப்பது தான் சிறந்த முறை. தண்ணீர் ஊற்றி வேகவைக்கும் போது அந்த தண்ணீரிலே காய்கறிகளின் சத்துக்கள் இறங்கிவிடும். மூடி வைக்காமல் வேக வைக்கும்போது அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஆவியாகிவிடும். எப்போதும், அவ்வப்போது சமைத்த உணவை சாப்பிடுவதுவே சிறந்தது. மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடும்போது, அந்த உணவில் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து, உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT