NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

கோடீஸ்வர்கள் பின்பற்றும் 6 பழக்கவழக்கங்கள்! நீங்களும் பின்பற்றி பாருங்களேன்!!

கோடீஸ்வரர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை தவறாது கடைபிடித்து வருகிறார்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கிறது

வாழ்க்கையில் கோடீஸ்வரர் ஆகமுடியாவிட்டாலும் ஓரளவு வசதியுடன் வாழ வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் எவ்வளவு உழைத்தாலும் அவர்கள் ஈட்டிய பொருள் கையில் நிற்காமலே செல்லும். இதற்கு பலவகை காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது நமது வாழ்க்கை முறை. நமது அன்றாட வாழ்வில் சில பழக்கவழக்கங்களையும், நேர்மறையான சிந்தனைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் இந்தப் பிரபஞ்சம் நாம் பாடும் பாட்டிற்கு நம்மோடு சேர்ந்து பாடும். கோடீஸ்வர்கள், பிரபல அதிபர்கள், சினமா நட்சத்திரங்களுக்கு இந்த ரகசியம் நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர்கள் இதனை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

(Also Read: 5 Smart And Easy Ways To Save Money In 2020)

கோடீஸ்வரர்கள் கடைபிடிக்கும் 6 பழக்கவழக்கங்கள்

qed1b1po

1. வாசித்தல்

பொதுவாக வாசித்தல் பழக்கம் இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கும் புத்தகங்கள், வாழ்க்கை முன்னேற புத்தகங்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவைகளை வாசிக்கலாம். இது ஒருவருடைய வாழ்க்கை உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, தான் கோடீஸ்வரர்கள் ஒரு 20 நிமிடங்களாவது வாசிப்பிற்கு ஒதுக்கி விடுவார்கள்.

2. பட்ஜெட் வாழ்க்கை

அன்றாட வரவு-செலவுகளை கண்காணிக்க வேண்டும். இஷ்டத்துக்கு செலவு செய்யாமல் இருப்பதற்கு இது உதவும். மாதத்திற்கு இவ்வளவு ரூபாய்க்கு மேல் செலவு வரக்கூடாது என்று திட்டமிட்டு நீங்களே பட்ஜெட் போட்டுக் கொள்ள வேண்டும். 

3. பொருளாதாரத்தை நிர்வகித்தல்

முதலீடு, பைனான்ஸ், வரி விலக்கு போன்றவற்றை நன்கு ஆராய வேண்டும். அதிலிருந்து எவ்வளவு பலன்களைப் பெற முடியுமோ, எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும். 

vouvnnd8

4. கடன் வாங்காதீர்

தவிர்க்கவே முடியாத காரணங்கள் தவிர, வேறு எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கக்கூடாது. கடன் வாங்காமலே எந்த அளவுக்கு சமாளித்துச் செல்ல முடியுமோ, அந்த வழியைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, மருத்துவ செலவுக்கு கடன் வாங்கலாம். ஆனால், இஎம்ஐ.,யில் பெரிய டிவி, ஆடம்பரப் பொருட்களை வாங்கக் கூடாது. 

5. இலக்கை நிர்ணயிக்கவும்

ஒவ்வொரு நாளும் உங்களது குறிக்கோளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இலக்கை நீங்கள் எவ்வளவு தூரம் அடைந்துள்ளீர்கள் என்பதை மதிப்பீடு செய்யுங்கள். பணக்காரர்கள் இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறார்கள்.

6. எதிலும் நிதானம் தேவை

புதிதாக ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு, நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். 

Comments

(Also Read: 5 Habits Of Successful People)



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT