NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வேலைக்கான நேர்காணல்களில் சொல்லவே கூடாத 7 விஷயங்கள்!

இந்த கேள்விக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து உதாரணங்கள் சொல்வதை தவிர்த்து, உங்கள் திறமைகள், அனுபவம் மற்றும் கல்வி தகுதி பற்றி அதிகம் பேசுங்கள்

வேலைக்கான நேர்காணல்களில் சொல்லவே கூடாத 7 விஷயங்கள்!

நேர்காணல்கள் என்றாலே பதட்டம்தான். நாம் நேர்காணலுக்கு செல்லும் நிறுவனத்தில் வேலை கிடைத்திட, அங்கு வரும் மற்ற எல்லோரையும் விட நாம் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான். அதே சமயம், ஒரு நேர்காணலின் முக்கிய நோக்கமே மற்ற எல்லோரையும் விட கேள்வி கேட்பவரை நாம் அதிகம் ஈர்ப்பதில் தான் இருக்கிறது. மற்ற எல்லோரையும் விட, ஏதோவொரு வகையில் நாம் தனித்து தெரிய வேண்டும். ஆகவே தயக்கம், பதற்றம், கூச்சம், பயம் ஆகியவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு 100 சதவிகிதம் முயற்சி செய்திடல் வேண்டும். 
‘இந்த வேலைக்கு நீங்கள் எந்த விதத்தில் சிறந்தவராக இருப்பீர்கள் என நினைக்கிறீர்கள்?’ ‘மற்ற எல்லோரையும் விட்டு, நாங்கள் ஏன் உங்களுக்கு இந்த வேலையை கொடுக்க வேண்டும்?’ போன்ற கேள்விகளுக்கெல்லாம் நாம் நம்மைப் பற்றி அளவிற்கதிகமாக பெருமை பேசுவதுண்டு; ஆனால், அதை செய்யாதீர்கள். பொறுமையாக யோசியுங்கள். எவ்வளவுதான் தைரியமாக இருந்தாலும் தயாராக வந்திருந்தாலும், நேர்காணல்களில் நமது திறமைகளையும் தகுதியை பற்றியும் சற்றே மிகைப்படுத்தி கூறுவது இயல்புதான். படபடவென மனதில் பட்டதையெல்லாம் பேசுவதை விட, பொறுமையாக நிதானமாக கொஞ்சம் குறைவாக பேசுவதே நல்லது. இந்த கேள்விக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து உதாரணங்கள் சொல்வதை தவிர்த்து, உங்கள் திறமைகள், அனுபவம் மற்றும் கல்வி தகுதி பற்றி அதிகம் பேசுங்கள்.      
வேலைக்கான நேர்காணல்களில் சொல்லவே கூடாத 7 விஷயங்கள் என்னவென பார்க்கலாம்:
1) “என்னுடைய மேனேஜர் சரி இல்லை. அவர் ரொம்ப மோசமான பாஸ்”   (நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்கள் வருங்கால மேனேஜர் ஆகப்போகும் ஒருவரிடம் உங்களது தற்போதைய மேனேஜர் பற்றி குறை கூறுவீர்களா என்ன?)


2) “எனக்கு அடுத்த மாதம் விடுப்பு தேவை” 
(முதலில் வேலை கிடைக்கட்டும், அதன் பின்னர் விடுமுறை குறித்து பேசிக்கொள்ளலாம்)  
3) “நான் இந்த ஃபோன் கால் அட்டெண்ட் பண்ணிக்கட்டுமா?”
(நேர்காணலுக்கு நடுவில் வரும் தொலைபேசி அழைப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை.) 
4) “என்னோட ரெஸ்யூம்லயே போட்டிருக்கேனே, நீங்க பார்க்கலையா?” 
(நீங்க ரெஸ்யூமில் போட்டிருக்கலாம். ஆனால், அவர் உங்களை நேரில் கேட்கிறார். பதில் அளியுங்கள்)    
5) “என்னுடைய தற்போதைய வேலை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை”
(நாளை இதே வேலையையும் அப்படித்தான் சொல்வீர்களா? என்ன பேசுகிறீர்கள் என யோசித்து பேசுங்கள்) 
Comments
6) “உங்கள் நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு எத்தனை நாள் விடுப்பு எடுக்கலாம்?” 
(இந்த கேள்வியை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்) 
7) “எனக்கு இந்த வேலை ரொம்பவே முக்கியம்”
(நேர்காணலுக்கு வரும் அனைவருக்குமே அந்த வேலை முக்கியம்தான், தேவைதான். இதை நீங்கள் சொல்லிக்காட்டி, உங்களை நீங்களே பலவீனமானவராக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை) 




அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT