NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

குறைந்த செலவில் நிறைவாக சாப்பிட 9 வழிகள்!

நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கும் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பட்ஜெட் பார்க்கக் கூடாது. 

குறைந்த செலவில் நிறைவான உணவு பொருட்களை எப்படி வாங்க வேண்டும்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், ஊரடங்கின் காரணமாகவும் பலருக்கும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருக்கும். இனி செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துதான் செலவு செய்ய வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். 

இந்த இக்கட்டான சூழலில் பட்ஜெட்டை கடுமையாகப் பின்பற்றி, ஆடம்பர பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லதுதான். ஆனால், அதே நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று அபாயம் இருக்கும் இந்நேரத்தில், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கும் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பட்ஜெட் பார்க்கக் கூடாது. 

அந்த வகையில், ஆரோக்கியமான, நல்ல முறையிலான பட்ஜெட்டை எப்படி  வகுக்கலாம், குறைந்த செலவில் நிறைவாக எப்படி சாப்பிடலாம் என்பது பற்றி இங்குகக் காணலாம். 

பலசரக்கு மளிகைப் பொருட்களை ஷாப்பிங் செய்யும் போது கண்டபடி எல்லாவற்றையும் வாங்க வேண்டாம். நிதானம் தேவை.

rspo35k8

குறைந்த செலவில் பொருட்கள் வாங்க டிப்ஸ்:

1. எதிர்காலத் திட்டம் 

உங்கள் பட்ஜெட்டை பெரியதாக்கும் போது, கவனமாக திட்டமிட வேண்டும். ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை மட்டும் வாங்கவும். அவற்றை வாங்கும் போது குறைந்த விலையில் உள்ள பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். 

2. மளிகைப் பொருட்களை வாங்கும் போது..

நிறைய மளிகைப் பொருட்களை வாங்கும் போது சிறிதளவு சேமிக்கலாம். விலைவாசி உயர்வு என்பது தினம் தினம் ஏற்படுகிறது. எனவே, நீண்ட காலத்திற்குக் கெட்டுப்போகாத பொருட்களை முதலில் வாங்கவும். அதாவது கிழங்கு வகைகள், கோதுமை மாவு போன்றவற்றை மொத்தமாக வாங்கலாம். 

3. விழிப்பு நிலையில் இருக்கவும்

சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளுக்குச் செல்லும் போது, கண்ணில் படுவதை எல்லாம் வாங்கத் தோன்றும். அந்த நேரத்தில் மனதை அடக்கிக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வாங்கவும். தேவையில்லாத பொருட்களில் மனம் செலுத்தி, தேவையானதாக மாற்றி விடாதீர்கள். சூப்பர் மார்க்கெட் செல்லும் முன்பே என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

anf1sd58


4. வாரத்தில் ஒரு நாள் அரிசி உணவு தவிர்க்கலாம்

வாரத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்நாள் முழுவதும் அரிசி உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக காய்கறி சாலட், பழக்கலவைகள் போன்றவற்றை மட்டும் சாப்பிடவும். இது உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 

5. ஆஃபர்களை அள்ளுங்கள்

முடிந்த வரையில் உங்களுக்குத் தேவையானப் பொருட்கள் ஆஃபரில் வந்தால் தாரளமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், ஆஃபரில் கிடைக்கிறது என்பதற்காகவே தேவையற்றப் பொருட்களை வாங்கிவிடாதீர். 

6. சீசன் உணவுகளை தேர்வு செய்யுங்கள்

சீசனில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை வாங்கலாம். அதன்விலையையும் கருத்தில் கொண்டு எது குறைவாக இருக்கிறதோ அதை வாங்கி சமைக்கலாம். 

midj1nno

7.ஃபிரஷ் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்

ஃபிரஷ்ஷான காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரை, கேரட் போன்றவற்றைத் தேர்வு செய்யவும். குறிப்பாக பாக்கெடுக்களில் அடைத்து வரும் பச்சைப் பட்டாணி, நாட்டு முட்டை போன்றவை ஆரோக்கியத்துக்கு நல்லது. விலையும் மற்றவற்றைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

8. அதிகளவு சமைக்கவும்

சமைக்கும் போது வெறும் ஒரு நேரத்திற்கு மட்டும் சமைக்காமல், குறைந்தது இரு வேளைக்கும் சேர்த்து சமைக்கலாம். இதனால் கேஸ் செலவு மிச்சம். உழைப்பும் மிச்சம். 

Comments

9. ஒரே உணவில் பல பதார்த்தங்கள்

சமைக்கும் போது ஒரே மூலப்பொருட்களைக் கொண்டு பலவற்றைச் சமைக்கவும். உதாரணத்திற்கு முருங்கைக் கீரை, முருங்கை சூப், முருங்கைப் பொரியல் என பலவற்றைச் செய்யலாம். செலவு மிச்சமாகும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT