NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

திருமண பாக்கியத்தை உண்டாக்கும் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் ! - ஆடி 18 சிறப்பு!!

குழந்தையற்றவர்களுக்கு மகப்பேறு உண்டாகிறது.  இந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் பக்தியின் வெளிப்பாடாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிறைய தொட்டில்களை கட்டிவிட்டிருப்பார்கள்.

திருமண பாக்கியத்தை உண்டாக்கும் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் !  - ஆடி 18 சிறப்பு!!

மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி பூரத்திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.  ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் ஆடி பூரத்திருவிழாவின் போது தமிழ் மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.   பூர நட்சத்திரம் என்பது அம்பாளுடைய திருநட்சத்திரமாக இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதனையே ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளின் திருநட்சத்திரமாகவும் கொண்டாடப்படுகிறது.  மாங்காடு திருக்கோயிலின் பரம்பரை தர்மகத்தாவின் ஏற்பாட்டின்படி சுமார் முப்பதாண்டு காலமாக கலச பூஜையும், சங்கு பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் கடந்த இருபதாண்டு காலமாக 1008 கலசாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.  இதனால் பக்தர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தாலும் கலசத்தை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செய்யப்படுகிறது.  இந்நாளில் அம்பாள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தருகிறாள்.  

62gmiusg

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை சிறப்பு பூஜைகள் நடைப்பெறுகிறது.  சித்திரா பௌர்ணமியன்று லட்சுமி, சரஸ்வதி மற்றும் அம்பாள் ஆகியோருக்கு லட்சார்ச்சணையும், வைகாசி மாதத்தில் வைகாசி விசாகமும், ஆனி மாதத்தில் பிரம்மோட்சவம் நடைப்பெறுகிறது. அடுத்ததாக ஆடி பூர திருவிழா நடைபெறுகிறது.  இதனை அடுத்து நவராத்திரியும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

இந்த காமாட்சி அம்மனை தொடர்ச்சியாக வழிப்படும்போது திருமண யோகம் கைக்கூடும்.   குழந்தையற்றவர்களுக்கு மகப்பேறு உண்டாகிறது.  இந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் பக்தியின் வெளிப்பாடாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிறைய தொட்டில்களை கட்டிவிட்டிருப்பார்கள்.    திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு மற்றும் குழந்தை பாக்கியத்தை வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபடலாம்.  

Comments
22b9ju9

ஆடி 18 அன்று, காவிரி போன்ற புண்ணிய நதிகள் பாயக்கூடிய மாவட்டமான திருச்சியில் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை நீர்நிலைகளில் விட்டு மீண்டும் புதுமண கோலத்தில் மஞ்சள் கையிறுகளை கட்டி கொண்டு தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக தளைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றனர்.  



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT