NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வில்லேஜ் டிக்கெட் 2019 பிரம்மாண்ட நிகழ்வு

நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100 மட்டுமே.

வில்லேஜ் டிக்கெட் 2019 பிரம்மாண்ட நிகழ்வு

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாராம்சத்தில் பெருமை கொள்ளும் வில்லேஜ் டிக்கெட், கிராமம் அடிப்படையிலான கருத்தாக்கத்தை சென்னையில் மீண்டும் ஒரு முறை உருவாக்கவுள்ளது. நமது அற்புதமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்க உதவும் மற்றும் நவீனத்துவத்திலிருந்து அவற்றை பாதுகாத்து வரும், கிராமத்து வாழ்வின் மூன்று தூண்களான – விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் சமையல்நிபுணர்களை கெளரவிக்கும் நோக்கில், பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் நிறுவனத்துடனான கூட்டாண்மையோடு மேற்கொள்ளப்படும் கூட்டு முன்முயற்சிதான் வில்லேஜ் டிக்கெட். வில்லேஜ் டிக்கெட் 2019 நிகழ்வு, சென்னை ஓஎம்ஆரில் அமைந்துள்ள, சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில், ஜனவரி 3, 4, 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெறவுள்ளது.

nlev3r3

3 முதல் 6 ஜனவரி 2019 வரை நடைபெறவுள்ள இந்த நான்கு – நாள் வில்லேஜ் டிக்கெட் நிகழ்வில், வாழைஇலையில் பரிமாறப்படும், கிராமத்து விருந்து (மதிய உணவு புஃபே 12 மணி முதல் நண்பகல் 3 மணி வரை) – சைவம் மற்றும் அசைவம் (48 உணவு வகைகளுடன்), கறி விருந்து (அசைவ இரவு உணவு) மற்றும் கல்யாண விருந்து (சைவ இரவு உணவு) இரண்டும் 32 உணவு வகைகளைக் கொண்ட (மாலை 06:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை) ஆகிய மூன்று வகைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. உறியடி, வில்வித்தை, நேரடியாகப் பானை செய்தல் போன்ற 20 – க்கும் மேற்பட்ட கிராமத்து விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பு நகர மக்களுக்கு கிடைக்கப்பெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், மங்கள வாத்தியம் போன்ற பல்வேறு கிராமத்து கலை நிகழ்ச்சிகள் மாலை 05:00 மணி முதல் இரவு 10:00 மணி வரைநடத்தப்படவுள்ளது. கிராமத்து, ஊறுகாய்கள், காரவகைகள், இனிப்புகள் போன்ற வாங்கிச்செல்லும் உணவு வகைகள் உட்பட, பல்வேறு உணவுப் பொருட்கள் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை விற்பனை செய்யப்படவுள்ளன. நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100 மட்டுமே.

Comments
is30l2i8

அன்சியோ மார்க்கெட் பிளேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தலைமை செயல்அலுவலர், திரு.ராம சுப்ரமணிய ராஜா நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாவர் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் தலைமை செயல் அலுவலர் திரு.C K.குமரவேல், நடிகை கஸ்தூரி, நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.ஆரி, தமிழகம் ஆர்கானிக் ஃபார்மிங்கைச் சேர்ந்த திரு.K.எழிலன் மற்றும் நல்ல கீரை நிறுவுனர் திரு.ஜெகன்னாதன் ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ddsu1o7o



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT