NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

காரசாரமான ஆந்திர உணவு வகைகளை வழங்கும் ‘ஆந்திரா அன்னம்’ புதிய ரெஸ்டாரன்ட்

இருவருக்கான மதிய உணவுக்கு ஆகும் செலவு- 300 ரூபாய். இரவு உணவுக்கு - 500 ரூபாய்.

காரசாரமான ஆந்திர உணவு வகைகளை வழங்கும் ‘ஆந்திரா அன்னம்’ புதிய ரெஸ்டாரன்ட்

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் முழுக்க முழுக்க ஆந்திர உணவு சுவையை அளிக்கும் “ஆந்திரா அன்னம்” என்ற ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டுள்ளது. கந்தன் சாவடியில் இருக்கும் ஓ.எம்.ஆர் ஃபுட்கோர்ட்டில் இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் இங்கு காரசாரமான ஆந்திர உணவு வகைகளின் விற்பனை தொடங்கியது.

20-ம் தேதி நடந்த திறப்பு விழாவில், ஆந்திரா அன்னம் ரெஸ்டாரன்ட்டில் பணி செய்பவர்களின் தாய்மார்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர். ரெஸ்டாரன்ட் ஊழியர்கள் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், பின்னணி பாடகர் அஜீஸ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஃபெபின் பிள்ளை ஆகியோர் இசை விருந்து அளித்தனர்.

a939h0l

1500 சதுர அடி கொண்ட இந்த ரெஸ்டாரன்டில் பாரம்பரிய ஆந்திர உணவுகளை, தற்கால உணவு ட்ரெண்டை சேர்த்து பரிமாறுகின்றனர். பாரம்பரியம் மற்றும் எளிமை என்ற தீமுக்கு ஏற்ற வகையில் இந்த ரெஸ்டாரன்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெஸ்டாரன்ட்டின் தீமில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்களுக்கு ஏற்ற வகையில், ஃபர்னிச்சர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெஸ்டாரன்ட்டின் ஹைலைட் அதன் விலை. மாணவர்கள், குடும்பங்கள், பேச்சிளர்கள், ஐ.டி ஊழியர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.

இங்கு பரிமாறப்படும உணவுகள், எந்த வித சந்தேகமும் இன்றி ஆந்திராவின் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. கொத்திமீரா கொடி வேப்புடு ( கொத்தமல்லி சிக்கன்), ஆந்திராவின் ஃபேமஸான தக்காளி பருப்பு குழம்பு, தாலித்த ஓமம் சோறு என உடல் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இவர்களின் மெனு இருக்கிறது.

இறால் சூப், சிக்கன் லாலிபாப் என இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ற உணவு வகைகளும் இருக்கின்றன.

இந்த ரெஸ்டாரென்ட்டின் தலைமை செஃப் தோர்தாலா ராஜா சங்கர், நட்சத்திர ரெஸ்டாரன்ட்களில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

Comments

இருவருக்கான மதிய உணவுக்கு ஆகும் செலவு- 300 ரூபாய். இரவு உணவுக்கு - 500 ரூபாய்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT