NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கலையும் சேவையும் சங்கமிக்கும் தெய்வீக திருவிழா

எய்ம் ஃபார் சேவா என்ற தொண்டு அமைப்பு, இந்தியாவில் 127 இடங்களில் சேவை புரிந்து வருகிறது

கலையும் சேவையும் சங்கமிக்கும் தெய்வீக திருவிழா

எய்ம் ஃபார் சேவா என்ற தொண்டு அமைப்பு, இந்தியாவில் 127 இடங்களில் சேவை புரிந்து வருகிறது. பூஜ்ய ஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இந்த அம்மைப்பு, கிராம புற மாணவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவசமாக தங்கும் விடுதி கொடுத்து, மரபு சார் கல்வியையும் இலவசமாக வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு இப்போது, தங்களின் ஆண்டு விழாவை ஒட்டி, சேவைகளுக்காக நிதி திரட்ட இரண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது.

1. நந்தலாலா - ஆகஸ்ட் 16, மாலை 7.00 மணி

மகா விஷ்ணுவின் அவதாரத்தை, போற்றிப்பாடப்படும் நந்தலாலா, இந்தியாவில் பல மொழிகளிலும் பிரசித்தம். பரதம், இசை, கதைகள், கலிய நர்தனம், கோவிந்த பட்டாபிஷேகம், கம்ச வதம், கீதை உபதேசமும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறுகிறது. இந்த நிகழ்ச்சி பரதநாட்டிய குருவான அனிதா குஹாவின் உருவாக்கத்தில் நடக்க உள்ளது. அனிதா சென்னையில் பரதாஞ்சலி நாட்டிய பள்ளியை 1989-ம் ஆண்டு தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஜகத் பவானி கங்கா - ஆக்ஸ்ட் 17, மாலை 7.00 மணி

கங்கையின் புனிதத் தன்மையை புராணங்களில் இருந்து விளக்கும் மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது ஜகத் பவானி கங்கா. அதுமட்டும் இல்லாமல், கங்கையின் தற்போதைய நிலையும், அதை காக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பரதம், கர்நாடக சங்கீதம், கர்வாலி இசை, நடனம், மைம் மற்றும் நாடகம் என அனைத்தும் கலந்து அமுத கலவையாக இந்த கங்கை நதி சிறப்பு நாடகம் அரங்கை மூழ்கடிக்க உள்ளது. நடனக் கலைஞர், நடன இயக்குநர், ஆசிரியருமான ரேவதி ரவிச்சந்திரன் இந்த நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளார். இவர் கலாக்‌ஷேத்திராவின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

நிகழ்ச்சி நடக்கும் இடம் : மியூசிக் அக்காடமி,சென்னை
தொடர்புக்கு - 044-24987955



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT