NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கால்நடைகளுக்கான இயற்கைத் தீவனம் - அசோலா

கலப்படம் நீண்டு கொண்டேயிருக்கிறது இந்நிலையில் அசோலா ஒரு வகையில் கலப்படத்தை குறைக்க உதவும்

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று பால். உலகிலேயே மிகவும் சத்தானதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது தாய்ப் பால். அந்த தாய் பாலுக்கு பிறகு ஒரு குழந்தை பசும்பாலை அருந்த தொடங்குகிறது. பசுவின் பால் அதிக ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த நவினக் காலத்தில் அனைத்திலும் கலப்படம் இருக்க கால் நடைகளின் தீவனும் கலப்படத்திற்கு விதிவிலக்கல்ல.

மாடுகள் கலப்படம் நிறைந்த தீவனத்தை உட்கொள்வதால் அதன் பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.இது போன்ற தீங்குகளிலிருந்து காப்பதற்காக இயற்கையான ஆரோக்கியம் நிறைந்த பாலை மற்றும் எண்ணற்ற நன்மைகளை அடைவதற்கும் அசோலா உதவுகிறது.

அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.

அசோலாவைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர் வரை கூடுதலாகப் பால் பெற முடியும். கறவை மாடுகள் மட்டுமின்றி முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, மீன் போன்றவையும் விரும்பி சாப்பிட்டால், எடை கூடும். கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது முட்டையிடுவது அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

ect7q1c8

பல நன்மைகளைக் கொண்ட அசோலா சுலபமானது மட்டுமல்ல, அதற்கான செலவும் மிகக் குறைவானது. அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும்.இதை வளர்ப்பதற்கு அடிப்படையான பொருட்கள் பொதுமானது மற்றும் இதை குழிகளில் வளர்க் வேண்டும். கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது என்று அசோலாவை கடந்த ஒரு வருடமாக வளர்த்து வரும் பிரபு கூறுகிறார்.

மேலும் அசோலாவின் விதைகள் மற்றும் வளர்ப்பதாற்கான விரிவான முறைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் தன்னை தொடர்புக் கொள்ளலாம் என்று கூறிய ஈரோடை சேர்ந்த பிரபு (7010529207 , 8883618221 ) இந்தியா முழுவதிலும் பலர் அசோலாவைப் பற்றி தன்னிடம் சந்தேகங்களைக் கேட்கின்றனர் என்கிறார் அவர்.

Comments

தற்போது கலப்படம் நாம் உண்ணும் மீன்கள் வரை நீண்டு கொண்டேயிருக்கிறது இந்நிலையில் அசோலா ஒரு வகையில் கலப்படத்தை குறைக்க உதவும். அசோலாவை பயன்படுத்த தொடங்கி ஆரோக்கியமான உணவுகளை உண்போம்.அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT