NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைக் கொண்ட வெட்டி வேர்!

தமிழர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்ட வெட்டிவேரின் நன்மைகள் இங்கு பலருக்கு தெரியவில்லை.

உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைக் கொண்ட வெட்டி வேர்!

வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதோடு நல்ல நறுமணத்தையும், பல விதமான நன்மைகளைக் கொண்டுள்ளது.பழங்கால மருத்துவத்தில் முக்கியமான பங்கை வகித்தது வெட்டிவேர். வீராணம் ,குருவேர், உசிர், என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அத்தனை வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும்.

இதன் வேர் கறுப்பு நிறமாக மணம் நிறைந்திருக்கும். சருமநோய்களுக்கு தீர்வாகவும், பல பொருட்களை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான  முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் நிலையில். இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெட்டிவேர் ரூம் ஃப்ரெஸ்னர், ஆயில் , செருப்புகள், என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை பலர் தயாரித்து வருகின்றனர். தண்ணீர், காற்று , உணவு என அனைத்தையும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது வெட்டிவேர். உள் உபயோகம் மற்றும் வெளி உபயோகம் என அனைத்திலும் பல நன்மைகளைக் கொண்ட வெட்டிவேர் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற சந்தேகம் நம்மில் பலரிடம் உண்டு. சில இடங்களில் வெட்டிவேர் பொருட்களை விற்பதைப் பார்த்திருப்போம்.ஆனால் அது நல்ல வெட்டிவேரா என்ற சந்தேகம் இருக்கும்.பலர் இயற்கையான வெட்டிவேரை விற்பனை செய்து வரும் நிலையில் அதில் திரு.பாண்டியனும் ஒருவர்.

பாண்டியன் என்பவர் தானே வெட்டிவேரை விளைவித்து பொருட்களை தயாரித்து நேரடியாக விற்பனை செய்து வருகிறார். வெட்டிவேர் தமிழர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த பொருட்களில் ஒன்று. வெயில் காலத்தில் உடம்பு உஷ்னத்தால் ஏற்படும் பல நோய்களிலிருந்து காக்கிறது. உலகம் முழுவதும் வெட்டிவேருக்கு அதிகமான தேவை இருப்பதாக கூறிய பாண்டியன் ஒரு கிலோ வெட்டிவேர் எண்ணெய் நாப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வரும் என்று கூறுகிறார்.மேலும் அவர், சமீபக்காலத்தில் மினரல் வாட்டர்களில் கெமிக்கல் கலப்பதாக கேள்விப்பட்டிருப்போம் தண்ணீரில் வெட்டிவேரை சேர்ப்பதால் அதில் இருக்கும் கெமிக்கலின் சக்தியை குறைப்பதாக கூறுகிறார்.

இந்த எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட வெட்டிவேரை வீட்டு தோட்டத்திலும்  வளர்க்கலாம் என்று கூறிய பாண்டியன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வெட்டிவேரின் நன்மைகளை உணர்ந்து பல விதமாக பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்ட வெட்டிவேரின் நன்மைகள் இங்கு பலருக்கு தெரியவில்லை என்று வருத்ததோடு கூறுகிறார்.

Comments

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வெட்டிவேர் பொருட்களை  ஆடர் செய்தால் வீட்டிற்கே கொரீயர் செய்து வைப்பதாக கூறுகிறார் பாண்டியன்.மேலும் வெட்டிவேர் பொருட்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளvettiverpandian@gmail.com அல்லது 9677985574 மூலம் தொடர்புக் கொள்ளலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT