NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

சதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, செடி முளைக்கும் விதை விநாயகர் சிலைகளின் விற்பனை இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது!

சதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, செடி முளைக்கும் விதை விநாயகர் சிலைகளின் விற்பனை இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படும் சிலைகள், நீரில் கரையாமல் மிதப்பதால், சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுகிறது. இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

ssvib7pg

இந்த விநாயகரை கரைத்தால், செடி முளைத்து, மரமாக வளரும். விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுற்றதும், வழக்கமாக, நீர் நிலைகளில் கரைப்பதற்கு பதிலாக, வீட்டில் மண் நிரப்பிய தொட்டியில், சிலையை வைத்து, தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலை கரைந்து, ஒரு சில நாட்களில் செடி முளைக்கும். செடி பெரியதாக வளர்ந்தவுடன், மண் சட்டியுடன் புதைத்து விட்டால், மரமாகி வளரும். இதனால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இருக்காது.

சென்னையின் பல இடங்களில் இது போன்ற விதை விநாயகர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் உள்ள ஹரித் தாரங் என்ற அமைப்பினர், களிமண் விநாயகர், வெட்டி வேர் விநாயகர், விதை விநாயகர் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்துள்ளனர். 125 ரூபாய் முதல் 575 ரூபாய் வரையிலான இயற்கை விநாயகர்கள் விற்பனைக்கு உள்ளனர். தொடர்புக்கு - 7395931217.

ஹோம் டெலிவரி வசதி கொண்ட இணையதளங்களும் விதை விநாயகர்களை விற்பனை செய்கின்றன. www.dialiyer.com என்ற இணையதளத்தில் க்ரீன் விநாயகர்களை ஆர்டர் செய்யலாம்.

Comments

மேலும், https://www.facebook.com/TerraEarthFood/ என்ற அமைப்பும், பேஸ்புக் மூலம் விதை விநாயர்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். 9.5 இன்ச் அளவுள்ள விநாயகர் 240 ரூபாய்க்கு விற்கப்பட்டுகிறது. அடையார், ஆர்வார்ப்பேட்டை, நீலாங்கரை ஆகிய பகுதிகளில் டெர்ரா எர்த் ஃபுட் ஸ்டோரின் கிளைகள் உள்ளன தொடர்புக்கு - 044-42088800 என்ற எண்ணை அழைக்கவும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT