NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

கெமிக்கல் அழகு சாதன பொருட்களுக்கு 'பை பை' சொன்ன இளம் பெண்கள்

பாட்டி வைத்திய முறைகளை பின்பற்றி இயற்கை அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகின்றனர் இரண்டு இளம் பெண்கள்

கெமிக்கல் அழகு சாதன பொருட்களுக்கு 'பை பை'  சொன்ன இளம் பெண்கள்

எத்திராஜ் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ், காம்ர்ஸ் என இரு வேறு பிரிவுகளில் படிப்பை முடித்த கல்யாணி, வாஹ்னித்தா,  இயற்கை அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகின்றனர். ‘பியல் போஷன்’ எனப் பெயர் கொண்ட இந்த பிராண்டு, பியல் என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘தோல்’ என்று அர்தமாம். பேஸ் பாக், மாய்ஸ்சுரைசர், தலைமுடி எண்ணெய், இயற்கை லிப்-பாம், கரு வளையம் நீக்கும் ஜெல் ஆகியவை தயாரிக்கின்றனர்.
 
இயற்கையான சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. பாட்டி வைத்தியம் முதல் பிராண்டு க்ரீம்கள் வரை நமக்கு அறிவுருத்துவது இது தான்- ‘நம் தோலின் தன்மைக்கு ஏற்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும்’ என்பது
 
வித்தியாசமான பிராண்டுகளில் கெமிக்கல் கலந்து வரும் பல அழகு சாதனை பொருட்கள், உலர்ந்த சருமத்திற்கு, எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு, கரு வளையங்களுக்கு, தலைமுடிக்கு, முகப்பரு பிரச்சனைகளுக்கு என பொருட்களை பிரித்து விற்கின்றன. இதே டெக்னிக்கை அந்த காலத்தில் இயற்கை பொருட்களாக பயன்படுத்தியதை நாம் அறிவோம்.
 
“ஆயூர்வேத குடும்ப பின்னனி என்பதால், பொதுவாகவே கெமிக்கல்ஸ் சார்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது, அழகு குறிப்புகள் சம்பந்தமாக நாங்கள் இருவரும் அடிக்கடி உரையாடுவது உண்டு. அப்படி உருவானது தான் பியல் போஷன்” என்றார் கல்யாணி
 
பாட்டி வைத்திய முறைப்படி, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்து உள்ளனர். “நாங்களும் கெமிக்கல் பிராண்டுகளை பயன்படுத்தி உள்ளோம். விலை அதிகம் ஆனால் பலன் குறைவு. பாட்டி குறிப்புகளை குடும்பத்தாரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். இணையத்தளத்திலும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்று கொண்டோம். இரண்டையும் சேர்த்து உருவானது தான் பியல் போஷன்” என்றார் வாஹ்னித்தா. அவை பலன் அளிக்கிறதா என்பதை அவர்களுக்குள்ளே சோதனை செய்து உள்ளனர்.
 
“இயற்கை தயாரிப்பில் உருவான பொருட்கள் பலன் அளிப்பதை உணர்ந்தோம். குங்குமாதி தைலம், கடலை மாவு, மஞ்சள், போன்று எளிதில் கிடைக்க கூடிய இயற்கை பொருட்கள் வைத்து தயாரிக்கிறோம். சாதரண சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாமே தவிர, வெள்ளை நிற சருமத்தை பெற நினைப்பது ஆரோக்கியமற்றது” என்றார்.
 
பியல் போஷன் பேஸ் பேக் உபயோகிக்கும் முறை
 
எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு:
பேஸ் பேக்கில் உள்ள பொடியை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து தேய்க்க வேண்டும்
 
உலர்ந்த சருமத்திற்கு:
பால் அல்லது தயிரில் கலந்து தேய்த்து கொள்ள வேண்டும்
 
20 நிமிடங்களுக்கு முகத்தில் விட்டு, பின் சுத்தமான நீரில் கழுவவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பேஸ் பேக்கை உபயோகித்து வந்தால், ஆரோக்கியமான சருமமாக மாறும்.
 
சருமத்தின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை விடுத்து, இயற்கையாக இருக்கும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது சிறந்ததாகும்
 
 
 


Comments

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT