NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கல்லீரல் தானம் செய்து 'உயிர் காத்த நண்பன்' - நெகிழ்ச்சி சம்பவம்

மூளைச்சாவு அடைந்தவர்கள், இயற்கை மரணம் அடைந்தவர்கள், உயிரோடு இருப்பவர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்

கல்லீரல் தானம் செய்து  'உயிர் காத்த நண்பன்' - நெகிழ்ச்சி சம்பவம்

உடல் உறுப்புதானம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஆகஸ்டு 13 ஆம் தேதி, உடல் உறுப்புதான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தோழியின் உடல்நல குறைப்பாட்டை நீக்க, உடல் உறுப்பு தானம் செய்து ‘உயிர் காப்பான் தோழன்’ என்ற கூற்றை நிஜமாக்கி உள்ளார் சென்னையை சேர்ந்த பிரசன்னா என்பவர்.

13 ஆண்டுகளாக உற்ற நண்பர்களாக இருந்த சென்னையை சேர்ந்த பிரசன்னா- பூஜா வாழ்க்கையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அதிர்ச்சியாய் காத்திருந்தது. உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜாவிற்கு கல்லீரலில் பாதிப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாற்று கல்லீரல் பொருத்தாவிட்டால், உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் பூஜாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

உறவினர்களின் உடல் உறுப்புகள் பூஜாவிற்கு பொருந்தவில்லை. பூஜாவின் உடல் நலத்தில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்ததால், இயற்கையாக மரணமடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் கல்லீரல் பொருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. காலம் தாழ்த்துவதினால், ஆபத்து கூடிக்கொண்டே சென்றதால், பூஜாவின் நண்பன் பிரசன்னா தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்தார்.

பிரசன்னாவின் கல்லீரல் பூஜாவிற்கு கச்சிதமாக பொருந்தவே, தன்னுடைய உயிர் தோழிக்கு உடல் உறுப்பு தானம் செய்தார் பிரசன்னா. “13 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக உள்ளோம். அந்த நேரத்தில், உடல் உறுப்பு தானம் செய்வது முதன்மையான உதவியாக இருந்தது. என்னுடைய தோழியின் உடல் நலனிற்காக என்னால் முயன்ற உதவியை செய்தேன்” என்றார் பிரசன்னா.

டில்லி மாக்ஸ் மருத்துவமனையில் நடைப்பெற்ற இந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில், நண்பர்களான பிரசன்னா-பூஜா மட்டுமின்றி, இரு குடும்பத்தாரும் முழு ஆதரவுடன் இருந்துள்ளனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததில், பூஜாவின் உடல் நலம் முன்னேறியுள்ளது. ‘உயிர் காத்த நண்பன்’ பிரசன்னாவின் இந்த செயல் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

உயிரோடு வாழ்பவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியுமா?

கண்டிப்பாக செய்யலாம். கல்லீரலின் ஒரு பகுதியை உறுப்பு தானம் செய்தவர், முதல் 6 மாதங்களுக்கு உணவு பழக்கங்களில், உடல் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின்னர், சாதரண வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம். “கல்லீரல் உறுப்பு தானம் செய்பவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. 6 மாதங்களுக்கு பின்னர், நார்மல் ஆகிவிடடும். கல்லீரல் பகுதிகள் மீண்டும் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால், எந்த தயக்கமும் இன்றி, உறுப்பு தானம் செய்தேன்” என்றார் பிரசன்னா.

இது போன்று உடல் உறுப்பு தானம் பெறுவதினால், பலரது உயிர் காப்பாற்றப்படும். ஆனால், நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்த போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மூளைச்சாவு அடைந்தவர்கள், இயற்கை மரணம் அடைந்தவர்கள், உயிரோடு இருப்பவர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்.

Comments

உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnos.org , www.transtan.org என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால், பலரது உயிரினைக் காப்பாற்ற முடியும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT