NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

நம் பூமிக்காக உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த சிறு மாற்றம் செய்யுங்கள்

இந்த அமைப்பு பழைய துணிகளை வைத்து பைகளை தயாரித்து வருவதோடு, மக்களுக்கும் பழைய துணிகளை வைத்து பைகளை தாங்களே தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது.

நம் பூமிக்காக உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த சிறு மாற்றம் செய்யுங்கள்

பிளாஸ்டிக்கை ஒழிக்க துணிப்பைகளை பயன்படுத்த தொடங்குவோம்.

நம்நாடு நாகரிகம், விஞ்ஞானம் என அனைத்திலும் முன்னேற்றமடைந்து வருகிறது. ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வருகிறது.அதில் சுற்றுச்சுழலை அதிகமாக பாதிக்கும் பிளாஸ்டிக்  இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கிடையில் சமிபத்தில் தமிழக அரசு ஜனவரி 1, 2019 லிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.இதற்கு முன்பே பலர் பிளாஸ்டிக்கு பதிலாக பல மாற்றுப் பொருட்களை பயன்படுத்த தொடங்கினர். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பின்னர் பிளாஸ்டிக்கு பதிலான துணிப்பைகள் மீதான கவனம் மக்களிடையே அதிகம் வந்துள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பை வரவேற்கும் வகையில் பல தன்னார்வல அமைப்புகள் துணிப்பைகளை தயாரித்து வருகின்றனர்.அதில் ஒரு நிறுவனம் தான் எகோ மித்ரா(Eco mithra).இந்த அமைப்பு பழைய துணிகளை வைத்து பைகளை தயாரித்து வருவதோடு, மக்களுக்கும் பழைய துணிகளை வைத்து பைகளை தாங்களே தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது.

தற்பொழுது இவர்கள் தயாரிக்கும் பைகள் 3 முதல் 5 கிலோ வரை எடையை தாங்கக் கூடியவை, கடைகளுக்கு காய்கறிகள் வாங்க செல்லும்பொழுது இந்த பைகளை எடுத்து சென்று கடையில் கொடுத்து பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறையும் என நம்புகிறது இவ்வமைப்பு.

இவ்வமைப்பை போலவே  பல அமைப்புகள் புதுவிதமான மாற்றுப் பொருட்களையும் துணிப்பைகளையும் தயாரித்து வருகிறது.அதில் ஒன்று தான் பல  உட்பிரிவுகளைக் கொண்ட துணிப்பை. ஒரே துணிப்பையில் அனைத்து காய்கறிகளையும் வைத்து அதை ஃபிரிட்ஜில் வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது பிளாஸ்டிக் பையின் பயன்பாட்டிற்கு மாற்றாகயிருக்கும்.

பல உயிரினிங்களின் இறப்பில் தொடங்கி கடுமையானச் சுற்றுச்சுழல் பாதிப்பு வரை பல தீங்குகளை விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சுழலை காப்போம்.


Comments

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT