NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அனைவருக்கும் அருள் புரியும் அம்பாள்… மாங்காடு காமாட்சியம்மன் கோயில் சிறப்புகள்!

கடந்த 1987 ஆம் ஆண்டு, சென்னை, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் கோபுரம் கட்டப்பட்டு முதல்முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது

கடந்த 1987 ஆம் ஆண்டு, சென்னை, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் கோபுரம் கட்டப்பட்டு முதல்முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு தங்க ரதத்துடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி,  2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தங்க கலசத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அர்த்தமேரு இயந்திரத்தையும் தங்கத்தில் செய்து வழிபட்டுவருவது இந்த கோயிலின் சிறப்புமிக்க ஒன்று. இக்கோயிலின் வரலாற்றில் ஆடி மாதம், நவராத்திரி, தை மாதம், குறிப்பாக சித்திரையில் லட்சார்ச்சணை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத வழிபாடுகள் அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பாக நடைபெறுவது போல மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலிலும் 1008 கலசபூஜையுடன், நான்கு நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறும். அதிலும் நான்காம் நாளான ஆடி பூரத்தன்று மாலை, காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா செல்வதின் மூலம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்புரிவாள்.

duq39t7g

மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ரவி சிவாச்சாரியார், கோயிலின் சிறப்புக்கள் மற்றும் வரலாற்றை நம்முடன் பகிர்ந்துகொண்டார், ‘ஆம்பாரண்யத்தில் (ஆம்பம் = மாம்பழம், ஆரண்யம் = காடு, மாம்+காடு = மாங்காடு) அம்பாள் தனக்கென்று ஒரு மாமரத்தை ஒதுக்கிக்கொண்டு பிராணன், அபாணன், உதாணன், வியாணன், சமாணன் எனப்படும் ஐந்து பூதங்களை ஐந்து அக்னிகலாக மாற்றி அதன் வெப்ப துவாளத்தின் மேல் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் புரிந்தாள். திக்விஜயத்தின் போது அர்த்தமேரு எனப்படும் மேரு பிரதிஷ்டையை ஆதிசங்கரன் பிரதிஷ்டை செய்கிறார். பின்னர் தன்னுடைய தவத்தை முடித்துவிட்டு, காஞ்சிபுரத்தில் திருமணம் செய்துகொண்டு வெள்ளீஸ்வர் ஸ்வாமிகளை சென்று பார்க்கிறாள் அம்பாள். அதையடுத்து, அம்பாளின் சகோதரனான வைகுண்ட பெருமாள், சீறாக மோதிரத்தைக்  கொண்டு வருகிறார். ஆதிசங்கரன் ஞானத்தில் அம்பாள் அக்னி மேல் தவம் செய்வதை அறிந்து, அர்த்தமேரு எனப்படும் ராஜயேந்திரத்தை எட்டு வித்தியாசமான மூலிகைகள் மற்றும் சந்தனத்திலால் ஆன அஷ்டகந்தம் என்னும் திரவத்தின் மூலம் பிரதிஷ்டை செய்கின்றனர். இந்த ராஜயேந்திரமானது உலகிலுள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள், செடி கொடிகள், பயிர்கள் என அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக ஸ்தாபிதம் செய்யப்பட்டது’ என்று விளக்கினார்.

Comments
s5j916o8

முன்பு குறிப்பிட்டது போல மேரு இயந்திரம் அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் தரக்கூடியது. அம்பாள் இத்திருக்கோயிலுக்கு வந்ததற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு பிரிந்திருந்த கணவனுடன் சேரவேண்டும் என்பதால் என்று கூறப்படுகிறது. இதனால் இங்குவந்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனும் ஐதீகம் உள்ளது. அதுமட்டுமின்றி தொழில் முன்னேற்றம், கல்வி தேர்சிக்காக சரஸ்வதி ஓமம் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட பேனாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வித நன்மைகளுக்காகவும் அம்பாளை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். 

7tediukoஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT