NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

சிறிய தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் FedEx 'SME இணைப்பு’..!

சென்னை நிகழ்வின் கருப்பொருள், 'செயல்திறன் மிக்க ஆபத்து மேலாண்மையின்வழியாக, நீடித்துநிற்கும் தொழில் நிறுவனமொன்றைக் கட்டமைத்தல்'.

உலகின் மிகப்பெரிய அதிவிரைவுப் போக்குவரத்து நிறுவனமும், FedEx நிறுவனத்தின் (NYSE: FDX) ஒரு துணை நிறுவனமுமான FedEx எக்ஸ்பிரஸ், இந்தியச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME/SMEக்கள்) வளர்ச்சியை ஆதரிக்கும் அதன் தொடர்ந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தன்னுடைய 'SME இணைப்பு' நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலுள்ள சென்னைக்குக் கொண்டுவருகிறது. 'SME இணைப்பு' நிகழ்ச்சியானது, SMEக்களுக்கான ஓர் எண்ணத் தலைமை மற்றும் அறிவுப் பகிர்தல் தளமாகும்; இதன்மூலம் அவர்கள் தொழில்துறை மற்றும் தலைப்பு சார்ந்த வல்லுனர்களுடன் தீர்வு சார்ந்த விவாதங்களில் ஈடுபடலாம், இவற்றின்மூலம் தங்கள் தொழிலில் தாக்கத்தை உண்டாக்கலாம்.

உத்யோக் ஆதார் குறிப்பின்படி,சென்னையில் 170,000க்கும் மேற்பட்ட MSMEக்கள் உள்ளார்கள், இதனால், தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய SME மையமாகவும், நாட்டின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இந்தப் பிரிவுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் துறைகள், துணிகள் மற்றும் ஆடைகள், தானியங்கிப் பொருட்கள், பொறியியல் தயாரிப்புப் பிரிவுகள், மருந்து நிறுவனங்கள், பெட்ரோலியம், பிளாஸ்டிக் மற்றும் அச்சிடுதல்.


சென்னை நிகழ்வின் கருப்பொருள், 'செயல்திறன் மிக்க ஆபத்து மேலாண்மையின்வழியாக, நீடித்துநிற்கும் தொழில் நிறுவனமொன்றைக் கட்டமைத்தல்'. இதில் முன்னணித் தொழில்துறை வல்லுனர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கிறார்கள், இப்போதைய பெரும் பொருளாதாரச் சூழல்பற்றிய தங்கள் தொழில்துறைச் சிந்தனைகளை வழங்குகிறார்கள், இந்த ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறைகளை விளக்குகிறார்கள்.

இந்த நிகழ்வுபற்றிப் பேசிய இந்திய FedEx எக்ஸ்பிரஸ் செயல்பாட்டுப்பிரிவுத் துணைத் தலைவர் திரு. முகம்மது சயேக், "FedEx ஒவ்வொரு நாளும் மக்களையும் சாத்தியங்களையும் இணைக்கிறது, சிறு தொழில்நிறுவனங்கள் தங்களுடைய பன்னாட்டு இலக்குகளை நாடுவதற்குத் தேவைப்படும் தீர்வுகள், வழிகாட்டுதலை வழங்குகிறது. 'SME இணைப்பு' நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பைச் சுறுசுறுப்பான தொழில் சந்தையாகிய சென்னைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். SMEக்கள்தான் நம் பொருளாதாரத்திற்கு, அந்தந்தப் பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வளர்ச்சி எஞ்சின்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்படும் சிந்தனைகளைக்கொண்டு அவர்கள் தங்களுடைய தீர்வுகளை மேம்படுத்தலாம், தங்கள் தொழிலுக்கான புதிய சாத்தியங்களை அணுகலாம்" என்றார்.

ஒவ்வொரு 'SME இணைப்பு' நிகழ்ச்சியும் உள்ளூர்ச் சந்தைக்குப் பொருந்துகின்ற, சிறப்பாகத் திரட்டப்பட்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது, இந்நிகழ்ச்சி, தொழில்துறை வல்லுனர்களுடனான குழு விவாதங்களின்வழியக வழங்கப்படுகிறது, இதன்மூலம் சிறு தொழில்நிறுவனங்கள் புத்தாக்கத்துக்கும் கற்றலுக்குமான வழிகாட்டுதலை, உதவிக்குறிப்புகளைப் பெறுவார்கள்.

Comments

FedExக்குத் தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில்நிறுவனங்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது; அவர்கள் தங்களுடைய முழுச் சாத்தியங்களை எட்டுவதற்கு உதவுவதற்காக அது தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 2017ல், FedEx சிறு தொழில்நிறுவனங்களுக்கான நல்கைப் போட்டியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இதன்மூலம், சிறு தொழில்நிறுவனங்கள் தங்களுடைய தொழில்களைப் பன்னாட்டளவில் கொண்டுசெல்வதற்குத் தேவையான ஊக்கம், நிதி வளங்களைப் பெற்றார்கள், தாங்கள் கால்பதிக்கும் எல்லைகளை வளர்க்கவும், தங்களுடைய போட்டித்திறனைக் கூர்மையாக்கவும் இது அவர்களுக்கு உதவியது. இந்தப் போட்டி தற்போது தன்னுடைய இரண்டாம் பதிப்பை நிறைவுசெய்துள்ளது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT