NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

இன்றே உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்!

நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் ஏராளம் இருப்பார்கள்

நம் அன்றாடம் வாழ்வில் நமக்கு கிடைக்க பெறும் உதவிகளுக்கு நாம் நன்றி சொல்லக்கூட பல சமயங்களில் மறந்து விடுகிறோம். சில சமயங்களில் யாரால் நமக்கு அந்த உதவி கிடைத்தது என்பதை கூட தெரியாமல் அதனை எளிதாக கடந்து விடுகிறோம். இப்படி நம் வாழ்நாளில் நாம் பிறந்ததில் இருந்து தற்போது வரை நன்றி தெரிவிக்காமல் நாம் பெற்ற உதவிகள் ஏராளம் இருக்கும். இவ்வாறு நாம் பெற்ற உதவிகள் பற்றி சற்று நிதானமாக சிந்தித்தால் நிச்சயம் நம் கண்முன் ஏராளமான முகங்கள் வந்து செல்லும். இப்படி நமக்கு உதவி செய்த பலரில் நீங்கள் எவருக்கேனும் உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக சென்று உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள். அப்படி முடியவில்லை என்றால் உங்கள் மனதிலாவது நினைத்து பாருங்கள்.

இந்த உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய நம் தாய், தந்தை. விளையாட்டு, கல்வி என எதிலும் நமக்கு முன்னோடியாக இருக்கும் நம் உடன்பிறப்புகள். முதிர்ச்சி என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் தாத்தா, பாட்டி. உறவுச் சிக்கல்களை கையாள கற்றுக்கொடுக்கும் சொந்த பந்தங்கள், இப்படி குடும்பத்திற்குள்ளே நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் ஏராளம். இவைத் தவிர பள்ளி நண்பர்கள், வகுப்பெடுத்த பள்ளி ஆசிரியர்கள், வழிகாட்டிய கல்லூரி ஆசிரியர்கள் என வெளிஉலகில் நாம் தன்னம்பிக்கையோடு காலடியெடுத்து வைக்க உதவியவர்கள் என இவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் ஏராளம் இருப்பார்கள். இதில் நம் கூடவே இருக்கும் பலரது உதவிகள் நம் கண்ணுக்கே தெரிவதில்லை. அப்படி ஒரு நபர் தான் சரத்குமார். நான் முன்னாள் பணிபுரிந்த நிறுவனத்தின் அலுவலக உதவியாளர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சரத்குமார் சிறு வயதிலே வறுமையின் காரணமாக பிழைப்புக்காக சென்னை நோக்கி வந்தவர். தொடக்கத்தில் ஹோட்டல் ஓன்றில் சர்வராக பணிபுரிந்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த பணியும் நிரந்திரமாக நீடிக்காததால் கிடைத்த சின்ன சின்ன பணிகளை செய்து வந்துள்ளார். 

தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் அவரிடம் பேசிய போது, இதே அலுவலகத்தில் என் வயதுள்ள பசங்க வேலை செய்வதை பார்க்கும் போது மனதில் லேசாக வருத்தம் வரும் நானும் படித்திருந்தால் இவர்களை போல் நல்ல பணியில் இருந்திருக்கலாம் என்று தோனும். என்ன செய்வது எனக்கு அது கிடைக்கவில்லை. எது எப்படியோ என்னால் இப்போது என் குடும்பம் நன்றாக உள்ளது என பெருமை கொள்கிறார். சரத்குமாரின் பணியானது அங்கு எவ்வளவு முக்கியமானது என்றால் அவர் ஒருநாள் விடுமுறை எடுத்தால் கூட அன்றைய நாளில் அலுவலகத்தில் உள்ள யாராலும் அவர் அவர் பணியை சரிவர செய்யமுடியாது. 

Comments

அந்த அளவிற்கு பணிபுரியும் அனைவரின் மன ஓட்டத்தையும் அறிந்தவர் சரத்குமார்.. யார் யாருக்கு என்ன தேவை என்பது நன்கு தெரிந்து சரியான நேரத்திற்கு தேவையானதை எடுத்த செல்வார். பைல்கள் எடுத்து தருவதில் இருந்து தேநீர், உணவு வாங்கி வருவது என அனைத்தையும் சளைக்காமல் செய்பவர். அப்படிப்பட்டவருக்கு இன்றைய தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பலர் மறைந்திருப்பார்கள் அவர்களுக்கு தவறாமல் உங்கள் நன்றிகளை தெரிவித்துவிடுங்கள். மனதில் அதிக சுமை கொண்ட சரத்குமார் போன்ற ஏராளமானோர் நம் கவலைகள் மறந்து பணிசெய்ய உதவி செய்பவர்கள். இவர்களை போன்ற பலருக்கும் நம்மால் அளிக்க முடிந்த ஒரே மகிழ்ச்சி நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டுமே.அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT