NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

குருபெயர்ச்சி 2019-20 : உங்கள் ராசிக்கு என்ன பலன்.? வரும் ஆண்டு சிறப்பாக அமையுமா..?

குருபெயர்ச்சி 2019-20 : உங்கள் ராசிக்கான ஆண்டு பலனை தெரிந்துகொள்ளுங்கள்.

குருபெயர்ச்சி 2019-20 : உங்கள் ராசிக்கு என்ன பலன்.? வரும் ஆண்டு சிறப்பாக அமையுமா..?

குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்பவை எல்லாம் சமீபகாலமாக மக்களிடையே மிக பிரபலமாகவும், வரவேற்கதக்கதாகவும் உள்ளது. ஜோதிடத்தில் விறுப்பம் கொண்டவர்கள், இந்த மூன்று பெயர்சிகளையும் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர். முன்பெல்லாம் குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சியை மட்டுமே பலரும் அறிந்துகொள்ள விரும்பினர். ஆனால், சமீபகாலமாக ராகு-கேது பெயர்ச்சிகளிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

கிரகங்களும், நட்சத்திரங்களும் சீராக எப்போதும் போல நகரந்து கொண்டே இருக்கின்றன. அவை தன்னைத் தானும் சுழற்றிக்கொள்கின்றன. இதன் இடைபட்ட காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இது இயற்கையான நிகழ்வு. ஆனால், இதனால் பூமியில் வாழும் மனிதர்களாகிய நமக்கு எப்படி மாற்றம் ஏற்படும்..? இப்போது சூரியன் நாம் இருக்கும் பகுதியில் உதிக்கிறது என்றால், நமக்கு அது காலை, பகல் மற்றும் மாலை பொழுதுகள் வருகிறது. இந்த பகல் நேரத்தில் நமக்கு தனிப்பட்ட சக்திகள் கிடைக்கிறது, சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது, மேலும் பல வேலைகளை நாம் செய்ய முடிகிறது. பகல் முடிந்து, சூரியன் உலகின் மறுபக்கத்துக்கு முழுமையாக நகர்ந்த பிறகு நமக்கு இரவு வருகிறது. அந்த நேரத்தில் நாம் ஓய்வெடுப்பது, கேளிக்கைகளில் ஈடுபடுவது என வேறு விதமான செயல்களை மேற்கொள்கிறோம். இப்படி, சூரியன், சந்திரன் மற்றும் பல கிரகங்கள், நட்சத்திரங்களின் நகர்வினாலும், அவை பூமியில் ஏற்படுத்தும் தாக்கங்களினாலும் நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுவே, நாம் இந்த பெயர்ச்சிகளை பற்றி அறிந்துகொள்ளக் காரணம்.

சனிப் பெயர்ச்சியை எதிர்கொள்ள பலரும் பயப்படுவார்கள், ஆனால் குருப்பெய்ர்ச்சியை ஆவலாக எதிர்ப்பாப்பார்கள். ஏனென்றால், சனி பகவான் நல்லவராக இருந்தாலும் சற்று கடுமையாக பாடம் கற்பிப்பவர், ஆனால் குரு அன்பாக அனைத்தையும் அள்ளிக் கொடுப்பவர்.

இம்முறை குரு பெயர்ச்சி அக்டோபர் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த இடப்பெயர்ச்சியின் போது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எந்த மாதிரியான வெவ்வேறு பலன்களை கொடுப்பார், இப்படிபட்ட நன்மைகளைச் செய்வார், எந்த மாதிரியான சிரமங்களை கொடுப்பார் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

மேஷம் :

leu4acg8
மேஷ ராசி அன்பர்களுக்கு குரு பகவானானவர், இந்த பெயர்ச்சியில் அஷ்டமம் எனும் கடுமையான ஸ்தானத்துலிருந்து, பாக்கியம் எனும் மிக வசதியான ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால், மேஷ ராசிக்காரர்களுக்கு மிக விஷேஷமான பலன்கள் கிடைக்கவுள்ளது. கடந்த ஆண்டில் அஷ்டம குருவால் வேலை இழப்பு, வியாபாரச் சரிவுகள், பண இழப்பு, அவமானங்கள், துன்பங்கள் என கடுமையான சூழ்நிலைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால் இப்போது நிகழும் பாக்கியஸ்தான குருவால் சூழ்நிலைகள் அப்படியே தலைகீழாக மாற்றியமைக்கிறது. குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும், மகப்பேறு கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பும். அற்புதமான விளைவுகளை உண்டாக்கும். இழந்த சொத்துக்களை மீட்கவும், புதிய சொத்துக்களை வாங்கவும் குரு உதவியாக இருப்பார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்களுக்கு மிக அதிர்ஷ்ட நிறமாக மஞ்சல் மற்றும் நீலம் இருக்கும். அதிர்ஷ்ட எண்கள் 6, 8.

ரிஷபம் :

jf3d0s1
சப்தமம் என்று சொல்லக்கூடிய அழகான ஸ்தானத்தில் இருந்து பல நன்மைகளையும், சலுகைகளையும், ஆனந்தத்தையும் கொடுத்த குரு பகவான், இந்த பெயர்ச்சியில் 8-ஆம் இடத்தில் குரு செல்வதால் அஷ்டமத்து குருவாக இருக்கிறார். இதனால் வரும் ஆண்டில் சில சோதனைகள், தண்டணைகள் ஏற்படலாம். ஜாதகம் வலுவாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் ஜாதகத்தில் சில இன்னல்கள் இருப்பவர்களுக்கு இந்த அஷ்டம குரு பெயர்ச்சி சற்றே சோதனை நிறைந்ததாக இருக்கும். நாம் அமைதியாக் இருந்தாலும், பிறர் மூலமாக இடஞ்சல்களும், எதிர்ப்புகளும் வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்காததால் சில வியாபார சரிவுகள் ஏற்படும். ஆனால் ஏற்றுமதி இரக்குமதி செய்வதில் அனுகூலம் உண்டு. மாணவர்கள் மேன்மேலும் வளர்ச்சியடைவர். கஷ்டங்களை குறைக்கவும், காரியங்களை வெற்றிகரமாக்கவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் உதவியாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள் 7, 8.

மிதுனம் :

4cc5637
மிதுன ராசிக்காரர்களுக்கு இது வரவேற்கத்தக்க குரு பெயர்ச்சி. சஷ்டமம் என்று சொல்லக்கூடிய 6-ஆமிடத்திலிருந்த குரு பகவான், சப்தமம் என்று சொல்லகூடிய சொந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால், உங்கள் வாழ்க்கையில் நிலுவையில் இருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பல வெற்றிக்கனிகளை பறிக்கவும், சாதனைகள் படைக்கவும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரவும், திருமனம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கவும் மற்றும் பல சுப காரியங்கள் நடக்கவும் இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களி பயன்படுத்தினால் மேலும் அனுகூலம் கிட்டும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 1, 3.

கடகம் :

q5f7dpggமச்சமம் எனும் பூர்வபுண்ணியஸ்தானத்தில் இருந்து சஷ்டம ஸ்தானத்துக்கு குரு பகவான் இடம் பெயர்கிறார். இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை தீர்ந்தால், அடுத்த பிரச்சனைக்கு தயார் படுத்தும், மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்படுத்தும், கொடுத்த கடன் திரும்பவரமல் போகலாம், பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் ஓரளவு நிவாரணம் கிடைக்கவும், வாழ்க்கை வசந்தமாக மாறவும், இழந்த பொருளாதாரத்தை மீட்கவும் குரு பகவான் உதவுவார் என்பது ஆறுதலான செய்தி. சஷ்டம குரு உங்களுக்கு உதவிகரமாக இருக்க இந்த ஆண்டு நீங்கள் பயன்படுத்தவேண்டிய நிறங்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 1, 5.

சிம்மம் :

q56tspe
சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுதஷ்டம குருவிலிருந்து பஞ்சம குருவாக மாற்றம் அடைகிறது. பஞ்சம ஸ்தானமான 5-ஆம் இடத்தில் இருக்கும் குருவானவர் உங்களுக்கு இரு கரம் நீட்டி அள்ளித்தரப்போகிறார். அதிர்ஷ்டம் பெருகவும், பொருளாதாரம் அதிகரிக்கவும், பிரச்சனைகளிலிருந்தி விடுபடவும் குரு பகவான் அனுகூலமாக இருப்பார். குறிப்பாக பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை எற்படுத்தவும், கணவன் அல்லது சகோதரன் மூலமாக உதவிகளை பெற்று சுய தொழில் செய்ய அற்புதமான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி உதவிகரமாக இருக்கும். நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணம் பச்சை மற்றும் நீலம். உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 3, 9.

கன்னி :

29hkl63
கன்னி ராசிக்காரர்கள் நிறைய அவமானங்கள், இன்னல்கள், தலைவலிகள், பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால் இந்த குரு பெயர்ச்சியானது உங்கள் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் சிறப்பான உயர்வை கொடுக்கவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், உடல் சுகமடைவதற்கும், அற்புதமான மாற்றங்கள் கொடுப்பதற்கும் எல்ல நன்மைகளையும் தரும். தேங்கியிருந்த வியாபாரம் வளர்ச்சியடையும். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும். குடும்பத்தில் எல்லையற்ற இன்பம் தாண்டவமாடும். நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் வெள்ளை மற்றும் ஊதா. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 1, 6.

துலாம் :

tmbru9vதுலாம் ராசிக்காரர்களுக்கு 2-ஆம் இடத்திலிருந்து 3-ஆம் இடத்துக்கு குரு பகவான் இடம்பெயர்வதால், தொல்லைகள் சில இருந்தாலும், வெற்றிகள் பல அள்ளி தருவார் குரு பகவான். வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் நல்ல ஏற்றங்களையும், மாற்றங்களையும் தருவார். ஆனால், உடல் நலத்தில் சில குறைபாடுகள் ஏற்படலாம், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். சகோதரத்துவத்தில் சில பிணக்குகள் தோன்றி மறையும். பொருளாதாரச் சரிவுகள் மற்றும் சில ஏமாற்றங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 2, 8.

விருச்சிகம் :

r4qao2ro
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன ஸ்தானம் எனும் 2-ஆம் இடத்திற்கு குரு பகவான் இடம் பெயர்கிறார். இதனால் மிகவும் நன்மைகள் ஏற்படும், குறிப்பாக பொருளாதார்த்தில் வளமையை கூட்டி, வறுமையை குறைக்கும். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த விஷயங்கள் நடக்கவும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் அனுகூலமான குருபெயர்ச்சி இது. மேலும் நன்மைகள் நடக்க, நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் பச்சை மற்றும் சிகப்பு. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 4, 8.

தனுசு :

4q4p9jao
தனுசு ராசிக்காரர்களுக்கு 12-ஆம் இடத்தில் குரு இருந்ததனால் பலவிதமான இன்னல்கள், சஞ்சலங்கள், வேதனைகள், மன வருத்தங்கள், அச்சங்கள் ஏற்பட்டிருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலமாக பலவிதமான பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். எதிராளிகள் உங்களை குறைவாக எடைபோட்டு தோலைகள் கொடுத்திருப்பார்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் குரு பெயர்ச்சியானது இந்த நிலைபாட்டை மாற்றி, வாழ்க்கையில் வசந்தங்களை தர உத்தரவாதம் அளிக்கிறது. ஆனாலும், இது ஜென்ம குரு என்பவர், சில அச்சத்தையும் சந்தேகத்தையும் அளிப்பதோடு, கால தாமதமான, அதாவது தாகம் தீர்ந்த பிறகு தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை ஏற்படுத்தலாம். அதனால், குருப் பரிகாரம் தேவைப்படும். அதிர்ஷ்டம் பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் நீலம் மற்றும் ஊதா. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 2, 3.

மகரம் :

fi2hs8k8
மகர ராசி அன்பர்களுக்கு லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் விரையம் எனும் நஷ்ட ஸ்தானத்துக்கு வந்துள்ளார். ஆனாலும், இதனால் பெரிய இழப்புகளை சந்திக்கும் நிலைமை வராது. இருப்பினும் கூடுதலான செலவுகளைச் சந்திக்கவேண்டி இருக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படலாம். சொத்து வாங்குவது, திருமனத்திற்காக ஏற்படும் செலவுகள் போன்றவற்றால் பொருளாதார நெருக்கடி வரலாம். குடும்பத்தில் அமைதியான, மகிழ்ச்சியான் சூழல் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், முக்கியமாக அரசு வேலை பார்பவர்கள் நினைத்தபடி சன்மானம், இடமாற்றம், பதவு உயர்வு போன்றவை கிடைக்கும். நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் நீலம் மற்றும் மஞ்சள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 2, 7.

கும்பம் :

Comments
n2mjank8
கும்ப ராசி அன்பர்களுக்கு 10-ஆம் இடத்தில் குரு இருந்ததனால் கடுமையான மனக் கஷ்டம், பணக் கஷ்டம், துன்பம், வேதனை, தொழிலில்  பல விதமான பின்விளைவுகள் ஆகியவற்றை மட்டுமெ சந்தித்திருப்பீர்கள். ஆனால், இப்போது குரு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இடம் பெயர்வதால், இவை அனைத்தையும் சமன் செய்ய உன்னதமாக உதவுவார். குரு பகவான் தனாதிபதியாகவும் இருப்பதால், திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கவும், எதிர்பாராமல் பெரிய சொத்துக்கள் வாங்கவும், பஞ்சு அல்லது ஷேர் மார்கேட் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கவும் குரு ஆசீர்வதிப்பார். நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் ஆரஞ்சு மற்றும் ஊதா. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 6, 8.

மீனம் :

umbt73e8மீன ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானம் எனும் 8-ஆம் இடத்தில் இருந்த குரு பகவான், ராஜ்ஜியம் எனும் 10-ஆம் இடத்துக்கு வந்திருப்பதால், தொழில் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலங்களை செய்தாலும், வேறு சில விஷயங்களில் தொல்லைகளையும், தேவையற்ற சலனங்களையும் உண்டாக்கலாம். பெண்களுக்கு வயிற்றுப்பகுதிகளில் சில நோய்கள், உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்றங்கள் மற்றும் சிறப்புகள் உண்டு. பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பெருமை கூடும். மாணவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் பயன்படுத்த வேண்டிய வண்ணங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு. உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 3, 9.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT