NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

உங்கள் சாகசச் சுற்றுளா கனவை நிறைவேற்றும் ‘ஜிப்ஸி ஸ்பாட்’., அல்டிமேட் ஸ்பாட்..!

ட்ரெக்கிங், கேம்பிங் போகும் ஐடியா இருக்கா..? ‘ஜிப்ஸி ஸ்பாட்’ பற்றி கண்டிப்பா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்...

வாழக்கையில் நம் தேவைகளுக்காக வருடம் முழுக்க ஓய்வில்லாமல் வேலை பார்க்கிறோம். அப்படிச் செய்யும் போது நம் உடலும் மனமும் ஒரேடியாக சோர்டைந்து விரக்தியாக உணரச்செய்கிறது. இப்படிப்பட்ட நிலையில், நமக்கு நிச்சாயமாக எந்த வித மன அழுத்தமும், தலைவலியும் அற்ற நிம்மதியான நேரமும் மகிழ்ச்சியான சூழலும், உடலுக்கும் மனதுக்கு மிகுந்த ஓய்வும் தேவைப்படுகிறது.

இவ்வாறு நினைக்கும் போது தான் மக்கள், தற்காலிகமாகத் தங்கள் வேலைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு எங்காவது வெகு தூரமான, தொல்லையற்ற இடங்களுக்குச் செல்கின்றனர். சரி தான், வாழ்க்கையின் எல்லா நேரத்திலும், வேலையில் இருக்கும் டென்ஷன், குடும்பத்தில் இருக்கும் பாரம், சமூகத்தில் நம்மை சுற்றி நடக்கும் பிரச்சணைகள் என எல்லாவற்றையும் தலையில் ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்க நாம் இயந்திரம் அல்ல... 

மனிதர்கள் கண்டிப்பாக ஒரு காலகட்டத்தில் இந்த அன்றாட நடைமுறைகளை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு நிம்மதியாக இருக்கவே விருப்பப்படுகின்றனர். அது நிச்சயம் தேவை தான். ஒரு சிலர் தம்பதிகளாக தன் மனைவி அல்லது காதலி என ஒரு நல்ல இணையோடும், ஒரு சிலர் குடும்பத்தோடும், ஒரு சிலர் நண்பர்களோடு கூட்டாகவும் சுற்றுளா செகின்றனர்.

42j38qjo

முன்பெல்லாம், சுற்றுளா சென்றால் பிரபலமான சுற்றுளாத் தளங்கள், குளிர் பிரதேசங்கள், தீம் பார்க் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்போதும், குடும்ப ட்ரிப், கப்புல்ஸ் ட்ரிப் எல்லாம் இது போன்ற இடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், இளைஞர்களும், கூட்டாளி நண்பர்களும் இதுபோன்ற இடங்களைத் தவிர்த்து மலைப் பிரதேசங்களுக்கு இரு சக்கர வாகண ரைடு, ட்ரெக்கிங், கேம்பிங், வைல்டு சஃபாரி, ஜீப் சஃபாரி என அதிரடியான சாகச பயணங்களுக்கே செல்ல விரும்புகின்றனர். இது இப்போதைய இளம் வயதினர்களிடையே, குறிப்பாக பெண்களிடமும் ட்ரெண்டாக உள்ளது. இப்படி யாரைக் கேட்டாலும், ட்ரெக்கிங் போகிறோம், கேம்பிங் போகிரோம் என்று சொல்லிவிட்டு ஜாலியாக கிளம்பிவிடுகின்றனர். அனால், இப்படி யாருடைய உதவியும், இவற்றைப் பற்றித் தெரிந்தவர்களின் உடனில்லாமலும் ஏதோ ஒரு மலைக்கும், காட்டுக்கும் சென்று வருவது பாதுகாப்பானது அல்ல.

நீங்களும் இது போன்ற அனுபவங்களைப் பெற கேம்பிங், ட்ரெக்கிங் போக விறும்புகிறீர்கள் என்றால், மிகப் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளோடும், தெளிந்த அணுபவத்தோடும் உங்களை அழத்துச் செல்ல ‘Gypsy Spot' இருக்கிறது. அது என்ன ஜிப்ஸி ஸ்பாட், இது எப்படி நமக்கு உதவும்..!! என்று நினைக்கிறிர்களா..?

t4j2s10o

Gypsy Spot - யார் இவர்கள்..?

Gypsy Spot என்பது ஒரு மாறுபட்ட தனியார் சுற்றுளா சேவை நிறுவனமாகும். இவர்கள் உங்களின் சாகச ஆசைகளை தீர்த்து வைப்பதையே முழு நேர கடமையாகவும் வேலையாகவும் செய்கின்றனர். பல கணவுகளோடு தங்களிடம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு திருப்தியான சேவைகளை கனிவோடு அளித்து வருகின்றனர்.

6o9oe6ngஅருண் கார்த்திகேயன் மற்றும் இளங்கோ - இவர்கள் தான் ஜிப்ஸி ஸ்பாட்டின் தொகுப்பாளர்கள்.

இளைஞர்களுக்கு மட்டும் தானா..?

இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த சாகச பயணங்களா? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி ஒன்று இங்கு இல்லவே இல்லை. அன்றாட வாழக்கையத் தாண்டி இந்த இயற்கையை ரசிக்க மனதிலும், உடலிலும் வளிமையை தக்கவைத்திருக்கும் யாராக இருந்தாலும் இந்த சாகச பயங்களுக்கு வரலாம். நீங்கள் நினைப்பதை இவர்களின் பாதுகாப்போடு செய்யலாம்.

leq2irog

Gypsy Spot வழங்கும் சேவைகள் என்னென்ன..?

ஜிப்ஸி ஸ்பாட் உங்களுக்கு trekking, camping மற்றும் jeep safari ஆகிய சேவைகளைத் தருகிறார்கள்.

Camping (முகாமிடுதல்)

நாகரிகத்திலிருந்து வெளிவந்து இயற்கையின் அழகுக்கு மத்தியில் வாழம் அனுபவத்தை பயணிகளுக்கு இந்த கேம்பிங் வழங்குகிறது. முகாம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவைகள், அழகிய காட்சிகள், நீர்வீழ்ச்சி மற்றும் மரங்கள் நிறைந்திருக்கும் ஒரு வெளியில் அமைதியாக வானத்தைப் பார்த்துப் படுத்துகொண்டு, மேகங்களுக்குப் பின்னால் ஒளியும் நட்சத்திரங்களையும், சந்திரனையும் தேடும்போது ஏற்படும் உற்சாகத்தைப் போன்ற அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. இது போன்ற ஒரு மனம் நிறைந்த முகாமை ஜிப்ஸி ஸ்பாட் உங்களுக்கு தருகிறது. இதை அனுபவிக்கும் உங்களுக்கு
இந்த காட்சிகளும் ஒலிகளும் வாழ்நாள் முழுவதும் மரக்காது.

cf28r6do

Trekking (மலையேறுதல்)

மலைகளின் ஏற்றத்தில் நீண்ட தூரம் நடந்து, பாறைகள், விலங்குகள், மரங்கள், நீர்வீழ்ச்சிகளைக் கடந்து, உயரங்களை அடையும் போது ஏற்படும் அனுபவம் உங்களை மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த வலிமை உடையவர்களாக மாற்றும். சகிப்புத்தன்மையை அதிகரிக்கும். குழுவாக ஒன்றுசேர்ந்து மேல் நகர்வது ஒரு மந்திர அனுபவத்தைத் தரும். ஒரு கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியேறும் இந்த அனுபவம், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க முயற்சிக்சிக்கும் என்னம் கொண்ட ஒருவருக்கு எதையும் சாதிக்கு திறனை வளர்க்க செய்யும். இப்படி ஒரு பயணத்துக்கு ஜிப்ஸி ஸ்பாட் உங்களுக்கு உருதுணையாக உடனிருக்கும்.

qo7ikrho

Jeep Safari (ஜீப் சஃபாரி)

மலைகள் என்பது mountaineering, trekking and mountain biking செய்வதற்காக மட்டுமல்ல, ஜீப் சஃபாரி சுற்றுப்பயணங்களுக்கு மலைகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. ஜீப்புகளில் வசதியாக அமர்ந்துகொண்டு, அமைதியான மலை அழகை ஆராய்வதற்கும், உயர்ந்த மலைப்பாங்கான சாலைகளின் அழகை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் ஒரு தனித்துவமான வழியாக ஜீப் சஃபாரி இருக்கும். இந்த அருமையான சவாரியை மிகவும் பாதுகாப்பாக 44 ஜீப்களில் ஜிப்ஸி ஸ்பாட் உங்களுக்குத் தருகிறார்கள்.

rdtaurt8

Gypsy Spot சேவைகள் தரும் இடங்கள்..?

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டில் இருக்கும் கொடைக்காணல் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூனார் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும், trekking, camping மற்றும் jeep safari ஆகிய மூன்று சாகச சுற்றுளாவையும் ஜிப்ஸி ஸ்பாட் உங்களுக்கு வழங்குகிறது. அடர்ந்த மரங்கள், மேகம் சூழும் மலை உச்சிகள், பனி போர்த்திய புல்வெளிகள், மலைகளுக்கு நடுவே விடியும் சூரியன், தேயிலைத் தோட்டங்கள், பாறைகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், இதுவரைப் பார்த்திறாத செடிக் கொடிகள், மலர்கள் என மேர்குத் தொடர்ச்சிமலைகளின் மொத்த இயற்கை அழகையும் அனுபவிக்க ஏற்ற இந்த இடங்களில் தான் ஜிப்ஸி ஸ்பாட் உங்களை அழைத்துச் செல்லும் இடங்கள்..

nmvjg3vg

வேறென்ன, உங்கள் துணிமணிகள், காலணிகள், கேமரா மற்றும் உங்களுக்குத் தேவையான உபகரணங்கள் எல்லாவற்றையும் எடுத்து பேக் பன்னுங்க, ஜிப்ஸி ஸ்பாட்டுக்கு கிளம்புங்க..ட்ராஃபிக் சத்தங்களுக்குப் பதிலாக பூச்சி பறவைகளின் சத்தத்தை கேட்கவும், மாசு, புகைகளுக்கு பதிலாக இயற்கை மனம் கொண்ட காற்றை சுவாசிக்கவும், எந்திர வாழ்க்கைக்குப் பதிலாக உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்தப் பழங்குடித் தன்மையையும், காட்டுவாசியையும் வெளிக்கொண்டு வரவும், டென்ஷன் கவலைகளை மறந்து சற்று விளையாடவும், ஓய்வு பெறவும், மீண்டும் உங்கள் தினசரி வாழக்கையை மேலும் துனிச்சலோடு, உடல் மற்றும் மன வலிமையோடு எதிர்கொள்ள இந்த சாகசச் சுற்றுளாகள் தான் ஒரே வழி.. வாழ்க்கையை முழுதாக அனுபவியுங்கள்...

Comments

மேலும் விவரங்களுக்குத் தொர்புகொள்ள, www.gypsyspot.com
https://www.facebook.com/gypsyspotadventures/
https://goo.gl/maps/wKAVMBkaRzLujjXh9 இவற்றை க்ளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT