NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மாதவிடாய் நாட்களில் சரும பராமரிப்பு

இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், சருமம் பொலிவிழந்து, சோர்வடையும். அதனால் மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சில டிப்ஸ்கள்

மாதவிடாய் நாட்களில் சரும பராமரிப்பு

உடல் சோர்வு, மனச்சோர்வு, வலி நிறைந்த தசைப்பிடிப்பு என பல விஷயங்கள் மாதவிடாய் சமயங்களில் நம்மை வாட்டி எடுக்கும். ஆனால் இதுவரை நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்த, சரும பராமரிப்பும் இந்த சமயத்தில் மிக முக்கியம். இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், சருமம் பொலிவிழந்து, சோர்வடையும். அதனால் மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சில டிப்ஸ்கள் இதோ...

1. தண்ணீர்

இந்த நேரத்தில் உங்கள் சருமம் வறண்டு போகும் என்பதால், அதிக தண்ணீர் குடியுங்கள். அதோடு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும்.

2. பிம்பிள்

மாதவிடாய் சமயத்தில் பிம்பிள் வருவது பொதுவான ஒன்று. நமக்கு இது பிடிக்காவிட்டாலும், அதனை தடுக்க முடியாது. சிறிதளவு மஞ்சள் மற்றும் பட்டை பொடியுடன் கொஞ்சம் தேன் கலந்து பிம்பிளுக்கு மருந்தாகப் போடலாம். அதோடு, ஆயில் ஃப்ரீ மாய்ஸ்சுரைஸரை உபயோகிக்கவும்.

3. வழக்கமான பராமரிப்பு

இந்த நேரத்தில் வரும் பிம்பிள் மற்றும் வறண்ட சருமத்தை சரி செய்ய தோன்றும். ஆனால் அதை செய்யாதீர்கள். காரணம், ஹார்மோன் மாற்றத்தால் இப்படியான விஷயங்கள் நிகழ்வது இயற்கையான ஒன்று தான். ஆனால் தினம் உபயோகப் படுத்தும் கிளென்ஸர், டோனர், மாய்ஸ்சுரைஸர் ஆகியவற்றை தவறாது பயன்படுத்துங்கள்.

4. மாய்ஸ்சுரைஸர்

வறண்ட, எண்ணெய், காம்பினேஷன், சென்ஸிட்டிவ் என எந்த வகை சருமமாக இருந்தாலும், உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சுரைஸரைப் பயன்படுத்துங்கள். சருமத்தின் ஆழமான இடுக்குகளில் இவைகள் சென்று மாதவிடாய் காலம் முழுக்க சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Comments

5. அழுக்கை நீக்க

ஹார்மோன் மாற்றங்கள் உடலின் எண்ணெய் தன்மையை அதிகரிப்பதோடு, இறந்த செல்களை தோலின் மேற்பரப்பில் தேங்கச் செய்யும். இதை சரி செய்யவில்லை எனில், பிம்பிள், சரும எரிச்சல், அதிக எண்ணெய் பசை ஆகியவற்றை உண்டாக்கும். அதனால் இந்த நேரத்தில், ஸ்கிரப் செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT