NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

முகப்பரு பிரச்சனையா? - வீட்டிலேயே தீர்வு காண எளிய வழிமுறைகள் இதோ!

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி முகப்பருவின் தாக்கத்திலிருந்து மீள்வோம்.

Pimples will be gone with these quick remedies

முகப்பருவின் வருகை என்பது எல்லா வயதிற்குட்பட்டவர்களுக்கும் பல்வேறு விதமான சரும வகைகளை கொண்டிருப்பவர்களுக்கும் எரிச்சல் தரக்கூடிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதனை மறைப்பதற்கு பல்வேறு விதமான ஒப்பனை முறைகளை பயன்படுத்தினாலும் இறுதியில் பயனற்றதாக அமைகிறது. இதற்கான காரணங்களைக் குறித்து விரிவாகக் காண்போம்.

முகப்பருவின் தோற்றம்?

நம்முடைய தோலில் செபேசியஸ் என்ற சுரப்பி அதிகளவில் சுரக்கும் போது, சுரப்பிகளுக்கிடையியே தடை ஏற்பட்டு முகப்பரு தோன்றுகிறது. இது பொதுவாக நம்முடைய கன்னம், நெற்றி, தாடை, மார்பு, முதுகு மற்றும் தொடை போன்ற பகுதிகளில் தோன்றுகின்றன.
காரணங்கள்.

(Also Read: Why Am I Getting Pimples On My Face?)

hf8la3po

முகப்பரு தோன்றுவதற்கான காரணங்கள் 

முகப்பரு தோன்றுவதற்கு நம்முடைய ஹார்மோன் மாற்றங்களும் வாழ்க்கை மற்றும் மருத்துவ முறைகளும் காரணமாகின்றன. அவற்றுள் சில: 

•    சில மருந்துகள் நம்முடைய சருமத்தை விரிவடைய செய்வதால் தோன்றுகிறது.
•    நாம் உபயோகிக்கும் சில ஒப்பனைப் பொருட்கள் நம்முடைய சரும வகைக்கு பொருந்தாமல் போவதாலும் உருவாகிறது.
•    அடிக்கடி வியர்ப்பதாலும் நாளின் இறுதியில் ஒப்பனையை கலைப்பதாலும் தோன்றுகிறது.
•    கருப்பையில் கட்டிகள் உருவாவதாலும் தோன்றுகிறது.
•    பருவமடைதல் மற்றும் கருவுருதல் போன்ற சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் உருவாகிறது.
•    நம் அன்றாட உணவில் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதாலும் தோன்றுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நம்முடைய முகத்தில் முகப்பரு தோன்றியவுடன், எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அதனை அழுத்தி, அழுக்கை வெளியேற்ற வேண்டும். 

மேலும் கீழ்க்கண்ட வழிமுறைகளையும் பின்பற்றலாம்

•    பாக்டிரியாவின் பரவலைத் தடுக்க, நம் கைகளை அடிக்கடி முகத்திற்கு கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.
•    சரும பாதுகாகாப்பு வழிமுறைகளான ஈரப்பதமாக்குதல், சுத்திகரித்தல், சூரிய கதிர்களிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
•    வீட்டிலோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று ஆலோசனைப் பெற வேண்டும்.
•    அதிக எண்ணெய் வகை உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

(Also Read: Did You Know? There Are 6 Types Of Pimples, And Each One Requires A Different Treatment)

ஒரே இரவில் முகப்பருவை போக்குவதற்கான வழிமுறைகள் 

skec5lqo

1. தேயிலை எண்ணெய்

இது பாக்டிரியாவை எதிர்க்கும் திறன் கொண்டது. இதன் இரண்டு துளிகளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து முகப்பருவில் தடவி, சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தக்க பலன் கிடைக்கும்.

2.கற்றாழை

இது சரும பாதுகாப்புத்துறையில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதன் வழுவழுப்பான பகுதியை; முகப்பருவில் தடவிவர நல்ல பலன் கிட்டும்.

3. தேன்

இதன் பாக்டிரியாவை எதிர்க்கும் திறன், வீக்கத்தைக் குறைத்து குணப்படுத்துதலை ஊக்குவிக்கிறது. இரண்டு துளி தேனை ஓர் இரவு முழுவதும் முகப்பருவில் தடவி மறுநாள் காலையில் கழுவ, எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும்.

4. ஆஸ்பிரின்

இந்த மாத்திரையை நன்கு பவுடர் வடிவில் நொறுக்கி நீருடன் சேர்த்து முகப்பருவில் தடவ வேண்டும். இதன் வீக்கத்தைக் குறைக்கும் திறன் சரும பிரச்சனைகளை அகற்றும்.

5. பனிக்கட்டி

இதனை நேரடியாக பயன்படுத்தாமல், சுத்தமான துணியில் சுற்றி 20 நிமிடங்களுக்கு முகப்பருவில் தடவ வேண்டும். இதனை ஒருநாளைக்கு இருமுறை பின்பற்றி வர நல்ல பலன் கிட்டும்.

6.  கிரீன் டீ

இதன் கஷாயத்தை ஆறவைத்து முகப்பருவில் தடவ வேண்டும். ஒவ்வொரு நாள் இரவும் இதனை பின்பற்றினால் வீக்கம் குறைந்து சிவப்புத்தன்மை மறையும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி முகப்பருவின் தாக்கத்திலிருந்து மீள்வோம்.

Comments

(Also Read: 10 Home Remedies For Pimples: Keep Your Skin Flawless Naturally)



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT