NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப் வகைகள்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப் வகைகள்

தினமும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கிறதா என்றால் நிச்சயம் கேள்விக்குறி தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். அப்படியான சில சூப் வகைகளை இங்கே பார்ப்போம்.

1. காளான் சூப்

காளான்களில் ஏராளமான வைட்டமின் நிறைந்திருக்கின்றன. மேலும் செலினியம் எனப்படும் ஆண்டி ஆக்ஸிடென்ட் இதில் அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நலம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் சர்வரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது.

தேவையானப் பொருட்கள்

சிடேக் மற்றும் பட்டன் காளான் – 2 கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 6 பற்கள்

மஞ்சள் – ஒரு இஞ்ச்

சைனீஸ் கேபேஜ் (Boy Choy) – 1 (நறுக்கியது)

ஸ்பிரிங் ஆனியன் – ½ கப் (நறுக்கியது)

மிளகு தூள், உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் மற்றும் காளானை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் வேகவிடவும். வெந்தப் பின் அத்துடன் சைனீஸ் கேபேஜை சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்கு வேகவிட்டு பின் இறக்கவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துக் கொள்ளலாம். நறுக்கி வைத்த ஸ்பிரிங் ஆனியனை தூவி சூடாக பரிமாறவும்.

mushrooms

2. மட்டன் மிளகு சூப்

ஆட்டுக்கால் சூப்பில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளது. அவசரப் படாமல் நேரம் எடுத்து சமைக்கும்போது ஆட்டு எலும்பில் உள்ள கொலாஜன், அமினோ ஆசிட், வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் முழுமையாக சூப்பில் இறங்கிவிடும். வாரம் ஒருமுறை ஆட்டு எலும்பில் சூப்பு வைத்து குடித்தால் உடலில் இரும்பு சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் முழுமையாகக் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

மட்டன் எலும்பு – 500 கிராம்

கேரட் – 2

பூண்டு – 6 பற்கள்

நறுக்கிய இஞ்சி – ஒரு மேஜைக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி

வெண்ணெய் உருக்கியது – ஒரு மேஜைக்கரண்டி

தண்ணீர் – 4 கப்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை: அடி கணமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கேரட்டை 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின், 4 கப் தண்ணீர் ஊற்றி ஆட்டு எலும்பை சேர்த்து அத்துடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 1 மணி நேரம் 30 நிமிடங்கள் ப்ரஷர் குக்கரில் வைத்து 5 விசில் வந்த பின் மீண்டும் அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் வேக விட்டு சிறிது வெண்ணெய் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

bone broth

3. சிக்கன் வெஜ் சூப்

காய்கறியுடன் சிக்கன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப்பில் சத்துக்கள் நிறைந்திருக்கும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்

சிக்கன் ஸ்டாக் – 3 கப்

வேகவைத்த சிக்கன் – 1 கப்

சின்ன வெங்காயம் – 1

பூண்டு – 4 பற்கள்

இஞ்சி – ஒரு துண்டு

நறுக்கிய பீன்ஸ் – ½ கப்

நறுக்கிய கேரட் – ½ கப்

கொத்தமல்லி – 2 மேஜைக்கரண்டி

மிளகு தூள், உப்பு - தேவைக்கேற்ப

வெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி வைத்து கொள்ளவும். ஒரு குக்கரில் சிக்கனை போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். வெந்த பின் சிக்கன், தண்ணீரை தனியே வடித்து வைக்கவும்.

Comments

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் வெட்டி வைத்த பீன்ஸ், கேரட் மற்றும் சிக்கன் சேர்த்து வதக்கவும். பின், மிளகு தூள், உப்பு சேர்க்க வேண்டும். அனைத்தும் வதங்கியதும், அதில் சிக்கன் வேகவைத்த தண்ணீர் 3 கப் ஊற்றி மேலும் 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.

corn soup



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT