NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

காஞ்சிபுரம் பட்டு புடவைகளில் நாட்டுபுற வடிவமைப்பா!

வருங்காலத்தில் இது போன்ற எண்ணற்ற வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் இருக்கும் சுனிதாவின்அடுத்த வடிவமைப்பு இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகமாக உள்ளது

காஞ்சிபுரம் பட்டு புடவைகளில் நாட்டுபுற வடிவமைப்பா!

புடவைகள் தமிழ் கலச்சாரத்தின் அங்கமாகத் திகழ்கிறது. விழாக்காலங்களில் பட்டுப்புடவைகள்
பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது, அத்தகைய காஞ்சிபுரம் பட்டிற்கு மேலும் அழகைத் தங்கள் வடிவமைப்பின் மூலம் கொண்டுவந்துள்ளார் பாலம் சில்க்ஸ் ஜெய ஸ்ரீ அவர்களின் மகளான சுனிதா யோகேஷ்.
சுனிதா சிறு வயதிலிருந்தே ஒவியம் வரைவதில் சிறந்து விளங்கியிருக்கிறார். வடிவமைப்பில் விருப்பம் கொண்ட சுனிதா இந்த திறமை தனது தாத்தா மற்றும் அம்மாவிடமிருந்து வந்தாகக் கூறுகிறார். அவர் முதன்முதலாக வடிவமைத்திற்கும் இந்த folklore sarees பல தலைமுறையின் பாரம்பரியத்தை சமகாலத்திற்கு எடுத்து சொல்கிறது. இந்த புடவைகளை வடிவமைப்பதற்காக பல ஆராய்ச்சிகள் மற்றும் பயணங்களை மேற் கொண்டதாக கூறிய அவர், இதற்காக தான் எட்டு மாதங்கள் கடினமாக உழைத்ததாகவும் கூறுகிறார்.
 
0kaa2jo6sw0g

தனது வடிவமைப்பை புடவைகளில் கொண்டுவந்ததில் முக்கியமானவர்கள் நெசவாளர்கள் என்று கூறும் அவர் இதுவரை ஆறு புடவைகளை எண்ணற்ற வண்ணங்களில் வடிவமைத்திருக்கிறார்.
இந்த folklore sarees கலெக்க்ஷனை vogue நிகழ்ச்சியில் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளனர்.அதன் பிறகு சென்னையிலுள்ள பாலம் சில்க்ஸ்களில் இது கிடைக்கும். வருங்காலத்தில் இது போன்ற எண்ணற்ற வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் இருக்கும் சுனிதாவின்அடுத்த வடிவமைப்பு இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகமாக உள்ளது.
Comments

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT