NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

உங்கள் மாதவிடாய் சுழற்சி உடல் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது?

அதிகப்படியா ஓட்டம் இரத்தசோகைக்கு வழிவகுக்கிறது. எனவே, மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

A menstrual cycle reveals a lot about a woman's health

மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகிறது. எனவே அவர்கள் அதனைக்குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருத்தல் அவசியமாகிறது. தற்போது, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கும் ஆரோக்கியமற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் அதற்கான காரணங்களையும் காண்போம்.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி

கருப்பை சுழற்சி ஒவ்வொறு பெண்ணுக்கும் வேறுபடுகிறது. 22-34 நாட்களுக்குள் ஏற்படும் சுழற்சியே ஆரோக்கியமானதாகக் கருகப்படுகிறது. இதில் 2-8 நாட்கள் மிதமான அளவு இரக்கப்போக்கை அனுபவிக்கிறார் ஒரு பெண். பெரும்பாலான பெண்களுக்கு இந்நிகழ்வு வலி மிகுந்ததாக அமைகிறது. இதற்கு புரோஸ்டாகிளாண்டிஸ் எனப்படும் ஹார்மோனே காரணமாகும். முதல் இரண்டு நாட்களில் ஏற்படும் வலி சாதாரணமாகக் கருதப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தன்மைகள் யாவும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறுதலுக்கு உகந்ததாகும்.

(Also read: Did You Know That Irregular Menses Could Be A Sign Of Infertility?)

lvoaa97gHormones called Prostaglandins produce pain during periods

ஆரோக்கியமற்ற மாதவிடாய் சுழற்சி;

கீழ்க்கண்ட அம்சங்கள் ஆரோக்கியமற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கிறது.

1. 21 நாட்களுக்கும் குறைவான சுழற்சி

  • ஒரு சுழற்சிக்குப் பிறகு, 21 நாட்களுக்குள் அடுத்த சுழற்சி ஏற்படுமானால் அது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. இதனால் கருப்பையின் இருப்பு குறையும் அபாயம் உள்ளது.

  • சுழற்சி 10-15 நாட்களுக்குள் ஒழுங்கற்றதாக இருப்பின், அது அசாதாரண கருப்பை, கருப்பை சுருக்கம், கருப்பையின் சுவர் தடிமனாதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.

  • உடலுறவுக்குப்பிறகும் சுழற்சி ஏற்படுமாயின், செர்விக்ஸ் என அழைக்கப்படும் கருப்பையின் வாய்ப்பகுதியில் நோய்த்தொற்று அல்லது அரிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே இதற்கு பாப் ஸ்மியர் என்ற சோதனை தேவைப்படுகிறது.

2. 35 நாட்களுக்கு நீடித்த சுழற்சி

சில சமயங்களில், ஒரு சுழற்சிக்குப் பிறகு 35 அல்லது 45-60 நாட்களுக்குப் பிறகே அடுத்த சுழற்சி ஏற்படும். இதற்கு ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நிலையே காரணமாகும்.

•    இளம்வயதிலேயே பருவமடைதல்
•    அசாதாரணமான தைராய்டு
•    புரோலேக்டின் உற்பத்தி அதிகரித்தல்
•    இன்சுலின் உற்பத்தி தடைபடுதல்
•    மாதவிடாய் நின்று போதல்
•    கருப்பைக் கட்டி ஆகியவையே காரணமாக அமைகின்றன.

(Also read: Menstrual Hygiene Day 2020: Busting Common Myths About Menstrual Cups)

93p3pnl8Prolonged periods are the signs of massive hormonal imbalance

3. இரண்டு நாட்களுக்குள்ளாக அல்லது எட்டு நாட்களுக்குள்ளான ஓட்டம்

2 நாட்களுக்கு குறைவாக ஓட்டம் இருந்தால், அது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இந்த ஓட்டம் ஹார்மோன்கள் குறைவதாலோ அல்லது கருப்பை தொற்று காரணமாகவோ இருக்கலாம்.

4. அதிகப்படியான ஓட்டம் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்

அதிகப்படியான ஓட்டம் ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது. அதிகப்படியான ஓட்டத்திற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • கருப்பை வளர்ச்சி

  • பாலிப்

  • ஃபைப்ராய்டு

  • நோய்த்தொற்று

அதிகப்படியா ஓட்டம் இரத்தசோகைக்கு வழிவகுக்கிறது. எனவே, மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT