NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மனநல காப்பகத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய லயன்ஸ் கிளப்..!

பெண்கள் கல்வி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, திருவள்ளுர்வர் மாவட்டத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான ஆதரவு திட்டம் ஆகிய சேவை திட்டங்களை அதரிக்கும் நோக்கத்தில் லயன்ஸ் கிளப் மாநாடு நடைபெற்றது.

பெண்கள் கல்வி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, திருவள்ளுர்வர் மாவட்டத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான ஆதரவு திட்டம் ஆகிய சேவை திட்டங்களை அதரிக்கும் நோக்கத்தில் லயன்ஸ் கிளப் மாநாடு நடைபெற்றது.

அனைத்துலக அரிமா சங்கத்தின் மாவட்டம் 324 A1-ன் 6-வது மண்டலத்தின் மாநாடு ( Lions District 324A1 Region 6 ) இமாதம் கடந்த 4-ஆம் தேதி சென்னை லீ ராயல் மெரிடியனில் நடைபெற்றது.

இந்த மாநாடு 324 A1 மாவட்ட அரிமா ஆளுநர் ( District Governor ) Ln K.Jeganathan தலைமை ஏற்க, திருதமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், மாவட்டத்தின் முதல் , இரண்டாம் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஆறாவது மண்டலத்தைச் சார்ந்த 14 சங்கத் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், இந்த அரிமா ஆண்டில் 324 A1 ன் ஆறாவது மண்டலத்தின் 14 சங்கத்தின் தோழமையுடன் சேவை செய்த திட்டங்களையும் அதன் உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆளுநர் முன்னிலையில் மண்டலத் தலைவர் அரிமா பா. பாலமுருகன் வெளிபடுத்தினார். இதற்கு உறுதுணையாக வட்டார தலைவர்கள் மற்றும் மண்டலத்தைச்சார்நத முன்னாள் ஆளுநர் அரிமா என். ராஜசேகர் ஆலோசகராகவும் மற்றும் அனைத்து சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் செயல்பாடு குழுவினரின் அறிவுரை பேரில் மாநாடு நடத்தப்பட்டது.

uql8sohg

இந்த மாநாட்டில் மதுரையைச் சார்ந்த குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபி நல்லைய்யனுக்கு ‘மனிதநேய சேவையில் மிகவும் சிறப்பானவர் ' ( Humanitarian service excellence award) பட்டம் வழங்கப்பட்டது. வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூத்த அரிமா சி.ஏ. டேவிட் அவர்களுக்கு அரிமாவில் சிறந்த சேவையாளர் பட்டமும் வழங்கப்பட்டது.

5fk0sa28
euj7qei

இந்த மண்டல மாநாட்டில் ‘டுர் இந்தியா' (DURR INDIA) 15 லட்சமதிப்பிலான அவசரசேவை ஊர்திக்கான காசோலையை, அதன் vice president Ln.Ananda Krishnan அவர்கள் அரிமா மாவட்ட ஆளுநர் மூலமாக திருவள்ளுவர் மாவட்டத்தைத் சார்ந்த 'அன்பகம்' எனும் மனநல காப்பகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் வழங்க ஏற்பாடு செய்தது அரிமா ஆறாவது மண்டலத்தைச்சார்ந்த நுங்கம்பாக்க சங்கத்தின் தலைவர்கள், அதன் மூத்த உறுப்பினர்களான அரிமா கஸ்தூரிரங்கன், வட்டாரத்தலைவர் அரிமா பா.ரவிசங்கர் மற்றும் அரிமா அனந்தகிருஷ்ணன் ஆவார்கள்.

Comments

விழாவின் இறுதியில் திரு. தமிழருவி மணியன் அவர்கள் அன்பிற்சிறந்த தவமில்லை என்ற மாநாட்டு குறிக்கோளின்படி சிறப்பான உரையாற்றினார்! இதில் 400 மேற்பட்ட அரிமா சங்கத்தின் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் நண்பர்கள் கலந்து கொண்டனர். விழா நன்றியுரையுடன் இரவு விருந்தளித்து சிறப்பாக முடிவு பெற்றது. இது உலக அரிமா மாவட்டத்தின் மிகச்சிறந்த மண்டலமாக ஆறாவது மண்டலம் சேவையில் திகழ்கிறது என்பதை இதன் மூலம் நமது சமுதாயத்திற்கு எடுத்து காட்டியுள்ளனர்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT