NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

திருமதிகளுக்கான ஆறாவது மிஸஸ் இந்தியா அழகிப் போட்டி

இந்த அழகிப் போட்டி திருமணமான பெண்களின் அழகு, திறமை, கவர்ச்சி, கலாச்சாரம், குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் பங்கை காட்டுவதற்கான சிறந்த மேடை

திருமதிகளுக்கான ஆறாவது மிஸஸ் இந்தியா அழகிப் போட்டி

திருமணத்திற்கு பின்பு பெண்ணின் அழகு குறைந்துவிடும் என்றும் பலர் கூறக் கேட்டிருப்போம்.ஆனால் திருமணத்திற்கு பின்பு பெண்களின் அறிவும், அழகும் குறைவதேயில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாகயிருக்கிறது இந்த மிஸஸ் இந்தியா அழகிப் போட்டி.

மிஸஸ் இந்தியா அழகிப் போட்டி, திருமணமானப் பெண்களுக்காக இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய அழகிப் போட்டி இதில் 72 இறுதி தேர்வாளர்கள் ஒரே மேடையில் பங்கேற்பார்கள்.

இந்தியாவில் இது முதல்முறையாக 2013-ஆம் ஆண்டில் திருமணமான பெண்களுக்காக தீபாலி பட்னிஸால் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவில் திருமணமான பெண்களுக்காக நடைபெறும் ஒரே தேசிய அழகிப் போட்டியாக இது இருக்கிறது. உலகின் ப்ரிமீயர் அழகிப் போட்டிக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது.

27m5jrag

இந்த அழகிப் போட்டி திருமணமான பெண்களின் அழகு, திறமை, கவர்ச்சி, கலாச்சாரம், குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் பங்கை காட்டுவதற்கான சிறந்த மேடை. மேலும் அவர்கள் எடை, அழகு, நிறம் வயதை பொருட்படுத்தாமல் அனைத்து பெண்களும் அழகு என்பதில் உறுதியாக, வருடந்தோறும் பலர் கலந்துக் கொள்கின்றனர்.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 72 போட்டியாளர்கள் ரேம்ப் வாக் நடக்கிறார்கள்.

iismmuv

30 ஜூலை 2018 - ல் நடக்கவிருக்கும் மிஸஸ் இந்தியா 2018 அழகிப் போட்டி கிராண்ட் ஃபைனல், மூன்று பிரிவுகளில் 75 இறுதித் தேர்வாளர்கள் பங்கு பெறும் மிகப்பெரிய தேசிய அழகிப் போட்டியாக இருக்கும்.

தேதி: 30.07.2018

நேரம்: மாலை 5 மணியிலிருந்து

Comments

இடம்: ஃபெதர்ஸ் ஹோட்டல், 4/129, பொண்மாலை ஹை ரோடு, மணப்பாக்கம், சென்னை 89



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT