தற்போதைய நவீன கால இசைப் பிரியர்களில் பலரும், விண்டேஜ் எனப்படும் 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் உருவான ரெட்ரோ ஸ்டைல் இசையை கேட்கவும் ரசிக்கவும் தொடங்கிவிட்டனர். 20-30 வருடங்களுக்கு முன்னதாக இசையைக் கேட்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய, கணமான ரேடியோ பெட்டிக்கள், ஒளி நாடாக்கள், இசைத் தட்டுக்கள் என அனைத்தையும் மீண்டும் தேடிப்பிடித்து, கலெக்ஷனில் சேர்க்கவும், அந்தப் பழைய கருவிகளைப் பயன்படுத்தவும், அதே இசையைக் விரும்பிக் கேட்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பஞ்சாபி இளைஞர் நீரஜ் சப்லோக், தற்போதைய ரெட்ரொ இசைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சையை தரும் விதமாக ‘நாய்ஸி பாக்ஸ்' எனும் விண்டேஜ் ஸ்பீக்கரை தயாரித்து விற்கும் கம்பேனியைத் துவங்கி நடத்திவருகிறார்.
ஒருமுறை தன் சொந்த வேலையாக சீனாவுக்கு சென்ற அவர், அங்கிருந்து மிகப் பழமையான ஒரு ஸ்பீக்கரை வாங்கிவந்து, தனது பாட்டிக்கு பரிசளித்துள்ளார். அந்த ஸ்பீக்கரைப் பார்த்த பாட்டி, அந்த ஸ்பீக்கரில் உள்ள குமிழை (Knob) திருகி, தனது குழந்தை பருவம் ஞாபகங்களால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதை உணர்ந்த நீரஜ், இதே மகிழ்ச்சையை எல்லோருக்கும் கொடுக்க முடிவு செய்து, ஒரு முன்னணி ஆன்லைன் விற்பனை கம்பெனியிலிருந்து விலகி, சொந்தமாக விண்டேஜ் ஸ்டைல் ஒலிபெருக்கி கம்பெனியைத் தொடங்கினார்.
முதலில் இந்த ஸ்பீக்கரைகளை தயாரிக்க சீனவில் தன் சிறு வயதில் ரெடியோக்களைத் தயாரித்த ஒருமுதியவரின் உதவியோடு சில அனலாக் ராடியோ பெட்டிகளைத் தயாரிதுள்ளார் வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளார். ஒரு சில மாதங்களில் அந்த பெரியவர் இறந்துபோக, புதிய ரக ஸ்பீகர்களை விற்க முயற்சித்துள்ளார். அனால், அந்த விண்டேஜ் அனலாக் ரேடியோக்களுக்கு கிடைத்த வரவேற்புகள் இந்த புதிய தொழில்நுட்ப கருவிகளுக்கு கிடைக்கவில்லை. பிறகு 2017-ல் தனது சொந்த சேமிப்புகளைக் கொண்டு சீனாவிலேயே நன்பர்களின் துணையோடு சொந்தமாக நிறுவனத்தை தொடங்கி, தற்போது சொந்தமாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை தயாரித்துவருகிறார். பழைய ரேடியோ பெட்டிகளில் ஒலிக்கும் அந்த குறிப்பிட்ட இரைச்சலை குறிப்பிடும் விதமாக இந்த நிறுவனத்திற்கு ‘Noizzy Box' என பெயரிட்டுள்ளார்.
நாய்ஸி பாக்ஸில் Retro XS Prime, Retro Titan, Retro XXL Vintage, Retro XS Vintage மற்றும் Retro Vogue ஆகிய ஸ்பீக்கர் மாடல்கள் உள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் அனைத்தும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்களில் கிடைக்கிறது.
Retro XS Prime-ல் 6 வாட்ஸ் ஸ்பீக்கர், ப்ளூடூத், யூஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டு போர்டுகள் உள்ளது.
Retro Titan-ல் 20 வாட்ஸ் ஸ்பீக்கருடன் டி.எஸ்.பி ரேடியோ (Digital signal processing radio) மற்றும் எஸ்டி கார்டு வசதிகள் உள்ளது.
Retro XS Vintage-ல் 10 வாட்ஸ் ஸ்பீக்கருடன், 3 பேண்டு ரேடியோ மற்றும் ப்ளூடூத் உள்ளது.
Retro XXL Vintage-ல் 20 வாட்ஸ் ஸ்பீக்கருடன், AM, FM, SW1 and SW2 ஆகிய 4 பேண்டுகள் கொண்ட அனலாக் ரேடியோ, யூஎஸ்பி, எஸ்டி கார்டு போர்டுகள் மற்றும் நவீன கால கருவிகளுடன் எளிதாக இணைத்துக்கொள்ள ப்ளூடூத் ஆகியவை உள்ளது. இந்த அழகிய க்ளாசிக் கருவையை கட்டுப்படுத்த ரிமோட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
Retro Vogue-ல் என்பது 60 வாட்ஸ் சவுண்டு பார் ஆகும். இதில் ப்ளூடூத், 3.5 மிமீ ஆக்ஸ்-இன், AM, FM மற்றும் SW எஃப்.எம் ரேடியோ, யூஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டு போர்டுகள் உள்ளது. மேலும், இதிலிருக்கும் 1400 எம்ஏஎச் ரீச்சார்ஜபிள் லி-அயன் பேட்டரி மூலம் நீங்கள் இப்போது 7 மணிநேர தடையில்லா இசையை அனுபவிக்க முடியும்.
Commentsநீங்கள் ரெட்ரோ சகாப்தத்தை நேசிக்கும் இந்தக் கால இளைஞராக இருந்தால் மற்றும் அவர்களைப் போலவே இசையை அனுபவிக்க விரும்பினால், இந்த ரெட்ரோ ஸ்பீக்கர்கள் உங்களுகான வரபிரசாதமாக இருக்கும். இவற்றில் இருக்கும் ரோட்டரி டயலைப் பயன்படுத்தி எஃப்.எம் ரேடியோ அலைவரிசைகளை கேட்டு பழமையில் இருக்கும் இனிமையைக் கொண்டாடுங்கள். மேலும், இந்தக் கருவிகளை உங்கள் பாசத்திற்குறிய முந்தைய தலைமுறை வாசிகளுக்கு பரிசளித்து அவர்களின் முகத்தில் ஏற்படும் புன்னகையைக் கண்டு மகிழ்ச்சியடையுங்கள்.
அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.