NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ராயபுரத்தை கலக்கிய மாற்றுத் திறனாளிகளின் பைக்-டாக்ஸி!

சென்னை நகரத்தில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ‘மா உலா’ அமைப்பு விரிவடைய உள்ளது

ராயபுரத்தை கலக்கிய மாற்றுத் திறனாளிகளின் பைக்-டாக்ஸி!

சென்னையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. ஆனால், கொட்டும் மழையையும் தடையென நினைக்காது சென்னையை சேர்ந்த 30 வரலாற்று ஆர்வலர்கள் ராயபுரத்தை சுற்றிப் பார்க்க பைக்-டாக்ஸியில் சென்றுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளிகள் பைக்-டாக்ஸி சேவை சென்னையை கலக்கி வருகிறது. ‘மா உலா’ என்ற அமைப்பின் கீழ் இயங்கி வரும் பைக்-டாக்ஸி சேவையில் 23 மாற்றுத் திறனாளி ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர்.

ராயபுரம் குறித்த வரலாற்று சுவடுகளை அறிந்து கொள்வதற்கான ‘ராயபுரம் ரைட்’ நிகழ்ச்சியை, சென்னையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நிவேதித்தா லூயிஸ் ஒருங்கிணைத்திருந்தார்.

நகரத்தின் முக்கியமான, பழமையான பகுதிகளில் ஒன்றான ராயபுரத்தை சுற்றிப் பார்க்க, புதிய தகவல்களை அறிந்து கொள்ள, நடைப்பயணம் மேற்கொள்வது கடினமாக இருக்கும். எனவே, பைக்-டாக்ஸி பணியாளர்களுடன் இணைந்து ‘ராயபுரம் ரைட்’ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார் நிவேதித்தா லூயிஸ். “பொதுவாக பாரம்பரிய இடங்களுக்கு நடைப்பயணங்கள் மேற் கொள்வோம். ஆனால், இந்த முறை வித்தியாசமாக பைக்-ரைட் திட்டமிட்டிருந்தோம். எங்களுடன் இணைந்த மா உலா பணியாளர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலாற்று ஆர்வலர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளித்தனர்” என்றார் நிவேதித்தா.

30 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்ட ‘ராயபுரம் ரைட்’ நிகழ்ச்சி காலை 7.15 மணிக்கு தொடங்கியுள்ளது. பழமையான ராயபுரம் இரயில் நிலையத்தில் தொடங்கி, புனித பீட்டர் தேவாலையம், அங்காள பரமேஷ்வரி கோவில், நகரத்தின் பழமையான கல்மண்டபம் மார்கெட், புகழ்பெற்ற ராபின்சன் பூங்கா என பழமைகளின் வரலாறுகளை கண்டுள்ளனர்.

சென்னை நகரத்தில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ‘மா உலா’ அமைப்பு விரிவடைய உள்ளது என்று குழு ஒருங்கிணைப்பாளர் மொஹமத் கடாஃப்பி தெரிவித்துள்ளார். ராயபுரம் முதல் முடிச்சூர் வரை பெரும்பாலான முக்கிய பகுதிகளில் மா உலா இயங்கி வருகிறது. நகரத்தில் உள்ள வெவ்வேறு டூ-வீலர் சேவைகளுக்கு, டெலிவரி உதவிகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு மா உலா குழுவினருடன் இணைந்து செயல்பட 9003205336 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Comments

மேலும், மா உலா ஓட்டுனராக இணைய விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சில விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. மா உலாவுடன் இணைந்து பணியாற்ற சொந்த இரு சக்கர வாகனம், ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மா உலா அமைப்பை அனுகவும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று களம் வளர்த்திடுவோம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT