NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

ஆன்லைன் விவசாயம் பற்றி தெரியுமா?

கடந்த ஆண்டு, விவாசாய குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் அர்ச்சனா என்ற பெண், தன்னுடைய கணவரின் உதவியோடு மை ஹார்வெஸ்ட் அமைப்பை தொடங்கியுள்ளார்

இயற்கை உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களும் போதுமான நேரம் கிடைப்பதில்லை. எனவே, மை ஹார்வெஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் 'ஆன்லைன் விவசாயத்தை' அறிமுகப்படுத்தியுள்ளனர்

கடந்த ஆண்டு, விவாசாய குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் அர்ச்சனா என்ற பெண், தன்னுடைய கணவரின் உதவியோடு மை ஹார்வெஸ்ட் அமைப்பை தொடங்கியுள்ளார்

ஆன்லைன் விவசாயம் என்றால் என்ன?

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, 800 சதுர அடி விவசாய நிலத்தை உங்களுக்கென்று வாங்கி கொள்ளுங்கள். மாத சந்தாவில் உங்கள் இடத்திற்கான தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். உங்கள் நிலத்தில் பயிரிட கூடிய 40 வகைகளை உங்களிடம் விளக்கப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களை, விவசாயிகள் பாதுகாத்து வளர்த்து வருவர். நேரம் கிடைக்கும் போது, உங்களுக்கான விவசாய நிலத்தை நீங்கள் நேரில் சென்று பார்வையிடலாம் விவசாயம் செய்வது குறித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். பயிர் செய்யப்பட்டவை, அருவடை செய்தபின், ஃப்ரெஷ் ஆன காய்கறிகள், கீரை வகைகள் உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்

இதன் மூலம், ஆரோக்கியமான இயற்கை உணவு பொருட்களை நீங்களே தயாரித்து உண்ணலாம். உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமைகின்றன. ஆரோக்கியமான மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் எங்கிருந்து வருகிறது அறிந்து கொள்ளலாம்

http://www.myharvestfarms.com/#C1 என்ற இணையதளத்தில், உங்களுக்கான விவாசய நிலத்தை பதிவு செய்து கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை பயன்பாட்டிற்கு அளிக்கின்றனர். ஆன்லைன் விவசாயம் மூலம், ஆரோக்கியமான விவசாய பொருட்களை பெற்று கொள்ளலாம்.

 

 


Comments

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT