NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பாரம்பரியத்தை மீட்கும் ‘இயற்கை’ சந்தை

சென்னை தாம்பரத்தில் உள்ள ‘அகத்தி’ என்ற குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள், இயற்கைக்கு திரும்பும் பாதைக்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்

பாரம்பரியத்தை மீட்கும் ‘இயற்கை’ சந்தை

தாம்பரம் புதுதாங்கல் ஏரிக்கு அருகில், மரத்தடியில் சந்தை அமைக்கும் ‘அகத்தி’ குழுவினர், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ‘அகத்தி’ என்ற குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள், இயற்கைக்கு திரும்பும் பாதைக்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். மாதந்தோறும் சந்தைகள் அமைத்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து நேரடி விற்பனையாக நஞ்சில்லா உணவுகளை சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பாரம்பரிய ரக அரிசிகள், சிறு தானியங்கள், மரச்செக்கு எண்ணெய், திண்பண்டங்கள் ஆகியவை இந்த சந்தையில் விற்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் கைப்பைகளை கொண்டு வரவும், நெகிழி பைகளை தவிர்க்கவும், எண்ணெய் வாங்க பாத்திரம் கொண்டு வரவும் என்ற விதிமுறைகளை பின்பற்றுமாறு விற்பனையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

திணை, சாமை பிஸ்கெட், பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, மாப்பிளை சம்பா சிவப்பரிசி அதிரசம், கருப்புக்கவணி உருண்டை, எள் உருண்டை, நிலக்கடலை உருண்டை ஆகிய திண்பண்டங்கள், இரசாயணம் அற்ற வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், திணை, வரகு, கம்பு, கருப்பு உளுந்து, கேழ்வரகு, பூங்கார் அரிசி, கருப்புகவணி அரிசி, மாப்ள சம்பா அரிசி, பனஞ்சர்க்கரை, நெய் போன்று விவசாரிகளிடம் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட மளிகை பொருட்கள் ஆகியவை இந்த சந்தையில் விற்பனைக்கு உள்ளது.

Comments

சந்தை நடைப்பெறும் நாள்: ஆகஸ்ட் 12, ஞாயிறு நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இடம் : புதுதாங்கல் எரி, லட்சுமிபுரம் 11 பிரிவு, ராஜ்மோகன் நகர்,அம்மன் கோவில் அருகில், முடிச்சூர் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை. தொடர்புக்கு : 9940258184, +919042023090, 9042023090



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT