NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

சென்னை கடற்கரையில் பனை நடு விழா!

பதநீர், பனை வெல்லம், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு என உணவுப் பொருட்களாக பல வகைகளில் நமக்குப் பயன்படுகிறது பனைமரம்

பதநீர், பனை வெல்லம், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு என உணவுப் பொருட்களாக பல வகைகளில் நமக்குப் பயன்படுகிறது பனைமரம். இதன் ஓலைகள் விசிறியாகவும், அலங்காரப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுகிறது.

தண்ணீரே இல்லாத சூழலில் கூட வளரும் இந்த பனை சமீப காலமாக அழிந்து வருகிறது. இதனை மீட்டெடுக்கும் வகையில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையின் கடற்கரை பகுதிகளில் பனைமரம் நடவிருக்கிறார் ஐ.டி.துறையில் பணிபுரியும் சதீஷ், எனும் இளைஞர். தனது நண்பர்களுடன் உதவியுடன் இதுவரை சென்னையில் 60 ஆயிரம் பனை நாற்றுகளை நடவு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொண்டோம். "ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பனை குறித்த விழிப்புணர்வோடு, சென்ற வருடம் அவர்களை இணைத்துக் கொண்டு நிறைய இடங்களில் பனை விதைகளை விதைத்தோம். இந்த வருடம் நெய்தல் நிலமான கடல் சார்ந்த பகுதிகளில் பனை அவசியம் என்பதை உணர்ந்து, சென்னையின் கடற்கரையோர பகுதிகளில் பனை நாற்று நட முடிவு செய்தோம். இதன் முதல் கட்டமாக, பட்டினம்பாக்கம் கழிமுகம் (Broken Bridge), முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள பகுதிகளில் வரும் 13-ம் தேதி பனை நாற்று நடுகிறோம். அனைத்து இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்களும் கலந்துக் கொண்டு இயற்கையைக் காக்க முன் வர வேண்டும்" என்றார்.

Comments

தொடர்புக்கு
சதீஷ் - 9994969088
சந்தோஷ் - 9841990704
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com