NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

திருக்குறள் பென்சில்: மறுசுழற்சி செய்யப்பட்ட புதியவகை பென்சில்கள்

முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான திருக்குறள் பென்சில்களை தயாரிக்கிறார், சென்னையை சேர்ந்த திருமதி.சங்கீதா.

திருக்குறள் பென்சில்: மறுசுழற்சி செய்யப்பட்ட புதியவகை பென்சில்கள்

நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி தயாரிக்கும் பொருட்களை நாம் தினசரி வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மரங்களை சேதப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறைவதில்லை. 2500 பென்சில்களை தயாரிக்க ஒரு மரத்தை அழிக்க வேண்டி உள்ளது. இந்தியாவில், பென்சில் தயாரிப்பிற்கு ஆண்டு தோறும் 4000 மரங்கள் வெட்டப்படுகின்றன என்று தகவல்கள் சொல்கின்றன.

 

‘சங்கீனிஸ் ரெய்ஸ் தி எர்த்’ என்ற பேஸ்புக் பக்கத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொருட்களை தயாரித்து வருகிறார் திருமதி.சங்கீதா.  முக்கியமாக, மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சியை செய்து வருகிறார்.

 

‘திருக்குறள் பென்சில்ஸ்’ என்ற புதிய வகை பென்சில்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நெகிழி, வேதிப் பொருட்கள் பயன்படுத்தாது, முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை கொண்டு பென்சில்களை தயாரித்து வருகிறார்.  கூடுதல் சிறப்பாக, பென்சில்களில் திருக்குறள் அச்சிட்டு தயாரிக்கப்படுகின்றன. கல்வி பாடத்திட்டங்களில் கட்டாயம் வைக்கப்படுவதற்கான சிறப்பை திருக்குறள் பெற்றுள்ளது. அதனால், பென்சில்களில் திருக்குறளை அச்சிட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்குவதினால், அவற்றை கற்க எளிதாகவும், பயனுடையதாகவும் இருக்கும்.

 

Comments

மேலும், திருக்குறள் மட்டுமின்றி நாம் விரும்பும் எழுத்தை பென்சிலில் அச்சிட்டு தருகின்றனர்ச். 10 பென்சில்கள் கொண்ட ஒரு அட்டை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நம்மால் முடிந்த அளவு பங்களிப்பது மிகவும் அவசியமாகும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT