NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

குறைந்த செலவில் ரொமாண்டிக் டேட் ஐடியாஸ்

காதலர்கள் மற்றும் திருமணமானவர்கள் தங்கள் இணையுடன் தனிமையில் அதிக நேரம் செலவிடவும், சர்ப்ரைஸ் கொடுக்கவும் ஆசைப்படுவர்

காதலர்கள் மற்றும் திருமணமானவர்கள் தங்கள் இணையுடன் தனிமையில் அதிக நேரம் செலவிடவும், சர்ப்ரைஸ் கொடுக்கவும் ஆசைப்படுவர். ரொமாண்டிக் டேட்டிங்காக பெரிதளவில் திட்டமிடுவர். அதற்கு அதிகமான விலையும் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த தருணம் மற்றும் ஞாபகங்களை காட்டிலும் அந்த செலவு பெரிய விஷயமல்ல. ஆனால், பண போதாமை காரணமாக எல்லோராலும் எல்லா இடங்களுக்கும் சென்றுவிட முடிவதில்லை. ஆகவே, குறைந்த செலவில் உங்களை மேலும் நெருக்கமாக செய்யும் ரொமாண்டிக் டேட்டிங் செய்து உங்கள் இணையை அசத்த மூன்று ஐடியாக்கள் உங்களுக்காக.

1. இசையுடன் நீண்ட பயணம்

உங்கள் துணைக்கு பிடித்தமான பாடல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க கூடிய மற்றும் உங்கள் இருவரின் மகிழ்வான தருணங்களை மீட்டெடுக்க கூடிய பாடல்களையும் சேகரியுங்கள். உங்கள் காதலர் மற்றும் காதலியின் மனம் கவரும் வகையில் வண்ண மலர்களை பரிசளியுங்கள். அப்படியே சேகரித்த பாடல்கள் இருக்கும் மெனுவை ஆன் செய்த படியே உங்கள் நீண்ட தூர பயணத்தை தொடங்குங்கள்.

2. பிடித்தமான உணவுடன் பிக்னிக் செல்லலாம்

காலநேரம், தட்பவெட்பம், பருவநிலை என எல்லாவற்றையும் துள்ளியமாக ஆராய்ந்து பிக்னிக் செல்ல சிறப்பாக திட்டமிடுங்கள். வெளியூர், வெளி மாநிலம் என எங்காவது செல்லுங்கள். அத்துடன் வீட்டிலேயே சமைத்து எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு பிடித்தமான உணவை இருவரும் சேர்ந்து சமைக்கும்போது அது இன்னும் ருசிக்கும்.

3. ஒன்றாக படம் பார்க்கலாம்

Comments

உங்களுக்கு பிடித்தமான படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் உங்கள் துணைக்கு பிடித்தமான படங்களை பார்த்திருக்கிறீர்களா? இருவரும் வெவ்வேறு ரசனையுடன் இருப்பவர்களாக இருந்தாலும், ஒருவருக்கு பிடித்த படத்தை இருவரும் சேர்ந்து பார்ப்பதும் நல்ல அனுபவத்தை கொடுக்கும். கூடவே பீட்ஸா அல்லது பீர் என உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொண்டால் அந்த இரவு நிச்சயம் இனிய இரவாக அமையும்.
பணம் செலவழித்து தான் சந்தோஷத்தை பெற முடியும் என்றில்லை. மாற்றி யோசித்தாலே போது, இருப்பதை வைத்து மகிழ்வடையலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com