NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

“கடமையை செய்...பேராசை கொள்” - பச்சிளம் குழந்தை பராமரிப்பாளர் உஷா ராணி

உஷா ராணி போன்ற கதாநாயகிகளுக்கு நாம் ‘நன்றி’ சொன்னால் போதாது!

“கடமையை செய்...பேராசை கொள்” - பச்சிளம் குழந்தை பராமரிப்பாளர் உஷா ராணி

24 மணி நேரமும் குழந்தைகளை பராமரிப்பது எளிதல்ல. அதிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகளை பராமரித்து கொள்ள ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 680 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று சென்னை காஞ்சி காமகோட்டி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 28 வாரங்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு, தொடர் மருத்துவ கண்கானிப்பில் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். மனம் உடைந்த குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார் பச்சிளம் குழந்தை பராமரிப்பு நர்ஸ் உஷா ராணி.

கடந்த 16 ஆண்டுகளாக செவிலியர் பணியில் ஈடுபட்டு வரும் உஷா ராணி, “உடல் ஆரோக்கியம் குறைவான ஒவ்வொரு பச்சிளம் குழந்தையையும் பராமரிப்பது எங்களது மன தைரியத்துக்கான சோதனையாக அமையும்” என்று தொடங்கினார்.

“பிறந்து ஒரு மாதத்திற்குள்ளான பச்சிளம் குழந்தைகள், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது எங்களது பணியாகும். பச்சிளம் குழந்தையின் கண்கானிப்பாளராக இருப்பது எளிதல்ல. நம்பிக்கையும், மன தைரியமும், பொறுப்பாக கவணிக்கும் நோக்கமும் 24 மணி நேரமும் இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

இது போன்ற வேலைகளில், கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்பதையும் மீறி, அற்புதங்களை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக சொல்கிறார் உஷா ராணி. “பலனை எதிர்ப்பார்ப்பது எனக்காக அல்ல, உடல் பாதிப்புகளுடன் இருக்கும் பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படாதா? உயிர் காக்க அற்புதம் நடக்காத? குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்களா? என்ற பேராசை ஒவ்வொரு முறையும் என் மனதில் தோன்றும். தொடர் பராமரிப்பில் உள்ள குழந்தை, உடல் ஆரோக்கியம் பெற்று வீடு திரும்பும் போது அளவற்ற மகிழ்ச்சி கொள்வோம்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

மேலும், “குழந்தைகளின் சிகிச்சைக்கு செலவு செய்ய போதுமான அளவு பணம் திரட்ட முடியாத குடும்பத்தினருக்கு, மிலாப் அமைப்பின் சார்பில் நிதி உதிவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், பல குழந்தைகளின் உயிர் காக்கப்படுகிறது. சிகிச்சைக்கான பணம் திரட்ட முடியாத நிலையில், மருத்துவமனை சார்பில் மிலாப் உதவி முறை பரிந்துரை செய்யப்படுகிறது” என்றார்.

இது போன்ற பணிகளுக்கு இடையே, உங்களது குழந்தையை எப்படி கவனித்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “குடும்ப ஆதரவு இருக்கும் வரையில், இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு செவிலியரும் மன நிறைவோடு செயலாற்றுவார்கள். என் குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு பணிக்கு திரும்புவேன். கடந்த 16 ஆண்டுகளில், இரண்டையும் நிர்வாகிக்க பழகி கொண்டேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

Comments

சில பணிகள் 6-8 மணி நேர வேலைதான் என்று கடந்து செல்ல முடியவில்லை. நேரத்திற்கு பணியாற்றுவதையும் தாண்டி, தன்னலமற்ற அன்பும், பராமரிப்பும் அளிப்பது உயிர் காக்க போராடுவது சாதரணம் அல்ல. இவர்களை போன்ற கதாநாயகிகளுக்கு நாம் ‘நன்றி’ சொன்னால் போதாது!



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.