NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கரும்பலகை டூ ஸ்மார்ட் க்ளாஸ்! மாற்றங்களை விதைக்கும் பள்ளி ஆசிரியை!

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிராமத்து அரசு பள்ளியின் உள் கட்டமைப்பை மாற்றி அமைத்த ஆசிரியை! முன்னேற்றத்தால் மாணவ மாணவியர் பயன்

நண்பனாக, வழிகாட்டியாக இருந்து கல்வி, பண்பு என்று அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுத்தருவது ஆசிரியர்கள். ஆனால், கற்பித்தலோடு நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களின் நலனிற்காக கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வருகிறார் இந்த ஆசிரியை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுமலையனூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. காட்டுமலையனூர் பகுதியில் இயங்கும் ஒரே நடுநிலை பள்ளி என்பதால், 166 மாணவ மாணவியர் இங்கு கல்வி கற்கின்றனர்.

oead03

கடந்த 2009 ஆம் ஆண்டு, காட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் ஆசிரியை ஜெயப்பிரியா. அவரது பத்தாண்டுகால ஆசிரியை பணியில், காட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளியில் ப்ளாக் போர்டில் இருந்து ஸ்மார்ட் க்ளாஸாக மாறியுள்ளது, மரத்தடி வகுப்புகளில் இருந்து பள்ளி அறை வகுப்பாக மாறியுள்ளது, பராமரிப்பற்ற திறந்த வெளி இன்று விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. இப்படி, காட்டுமலையனூர் பள்ளியின் முன்னேற்றங்களுக்கு ஆசிரியை ஜெயப்பிரியா தொடர்ந்து போராடி வருகிறார். களத்தில் இறங்கி மாற்றங்களை விதைத்து வருகிறார்.

காட்டுமலையனூர் பள்ளிக்கு செல்ல சீரான போக்குவரத்து வசதி இல்லை. “நடுநிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் 7 கிலோமீட்டர் தூரம் பயணித்து உயர்நிலைப் படிப்பை தொடர் வேண்டியுள்ளது. 10 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, எங்கள் பள்ளியில் தற்போது ஒன்பதாம், பத்தாம் வகுப்புகள் இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார் ஆசிரியை ஜெயப்பிரியா.

1hjr2m58

கற்பித்தலில் புதுமைகளை சேர்த்தல், செயல்முறை விளக்கங்கள் கொடுத்தல், கணினி பயிற்சி, விளையாட்டு பயிற்சி, ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகள் என இவை அனைத்தும் காட்டுமலையனூர் பள்ளிக்கு வர காரணம், ஆசிரியர்களே!

காட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் உதவியுடன், ஆசிரியை ஜெயப்பிரியாவும் மற்ற ஆசிரியர்களும் பள்ளியை மறுசீர் செய்து வருகின்றனர்.

கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு, வசதியான பள்ளிக்கூடத்தை அமைக்க வேண்டும் என்று ஜெயப்பிரியா முடிவு செய்தார். அதனை தொடர்ந்து, முகநூல் உதவியுடன் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த பதிவுகளை பகிர்ந்தார். இதன் மூலம், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டினர். மேலும், எச்.சி.எல் கார்பரேட் நிறுவனமும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

7q3p9bho

6,7, 8 ஆம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த வகுப்பு அறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. “உதவி செய்ய பலரும் முன்வருகின்றனர். உடைந்து விழும் ஜன்னல்களும் கதவுகளும் இருக்கும் பள்ளியில் மாணவர்களால் எப்படி கல்வி கற்க முடியும். எனவே, என்னால் முடிந்தவரை ஆன்லைன் பதிவுகள் பகிர்வேன். அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு பள்ளியை சீராக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாட்டில் பங்களிப்பு, பள்ளி உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட ஆசிரியை ஜெயப்பிரியா காட்டுமலையனூர் பள்ளி மாற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். மாணவர்களுக்கு தேவையான நடமாடும் நூலகம், விளையாட்டு மைதானம், ஆகியவை அமைத்து கொடுக்க தேவையான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளார். காட்டுமலையனூர் பள்ளி முன்னேற்றத்தால், பல மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.

தற்போது 9,10 ஆம் வகுப்புகளும் இணைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கான வகுப்பு அறை இன்னும் கட்டப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகும். வகுப்பறைகள் கட்டுவதற்கு தேவையான நிதி இல்லாததால், புதிய அறை கட்டும் பணிகள் கிடப்பில் உள்ளன.

காட்டுமலையனூர் பள்ளி கட்டிடத்திற்கு உதவ விருப்பமுள்ளவர்கள்
ishujaya2002@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 9003500124 என்ற எண்ணை அழைக்கவும்.

கல்வி கற்றுத்தருவதை காட்டிலும், மாணவர்களுக்கான பள்ளியை தரமான முறையில் அமைத்து தர வேண்டி, அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் தன்னார்வ ஆசிரியர் ஜெயப்பிரியாவின் சாதனைகள் தொடர வேண்டும்.

Comments

ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT