NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சென்னை : 9,000 கலைஞர்களால் உருவான தொழில்நுட்ப கண்காட்சி..! "The Future Is Here"

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக உருவான கலை மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் தனித்துவமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் கண்காட்சியை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளகளுக்கு இதுவரைக் காணாத புது அனுபவத்தை அளிக்கிறது. தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் அது வழங்கும் அபாயங்களை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த கலை கண்காட்சிக்கு  ‘The Future Is Here' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலை கண்காட்சியை Dr. Arshiya Lokhandwala தொகுத்துள்ளார்.

தி ஃபியூச்சர் இஸ் ஹியர் கலைக் கண்காட்சி டாக்டர் அர்ஷியா லோகண்ட்வாலாவின் ஒரு ஆண்டு திட்டமாகும். ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட இந்த திட்டத்தில், தொழில்நுட்பத்துடனான நமது உறவை வெளிப்படுத்த 9,000 கலைஞர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்ற நவம்பர் மாதம் 28-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சி, வரும் 2020 ஜனவரி 22-ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.

The Future Is Here (எதிர்காலம் இங்கே) :

The Future Is Here : Art and Technology in a Millennial Age என்கிற இந்த கண்காட்சி, கேபிள் டிவி, கணினி, இணையம் மற்றும் செல்போன்கள் என குழந்தை பருவத்திலிருந்தே தொழில்நுட்பத்தைக் கண்ட 9,000 இந்திய கலைஞர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய முதல் கண்காட்சியாகும். இந்த கலைஞர்கள் தொழில்நுட்பத்தைத் தங்கள் டி.என்.ஏ.விலேயே உள்ளடக்கும் அளவிற்கு ஸ்மார்ட்போன்கள், அமேசானின் அலெக்சா மற்றும் ஆப்பிளின் சிரி, குரல்-அங்கீகாரம் AI அமைப்புகள், பிட்-நாணயம், நிண்டெண்டோ, டிண்டர், நெட்-ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற அனைத்து கருவிகளையும் பயன்படுத்தியவர்கள். இந்த கண்காட்சி, ஒரு நாளில் 24 மணிநேரமும் இணையத்தையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

The Future Is Here : Art and Technology in a Millennial Age கண்காட்சியில் இடம் பெற்றுள்ள 10 அம்சங்கள் :

1. Romicon Revola-வின் #WHO R U? செல்ஃபி கலாச்சாரத்தின் மீதான ஆவேசத்தை விவரிக்கிறது.

2. Payal Arya-வின் The Interspace தொழில்நுட்பம் நம்மீது அதன் தாக்கமாக வளர்ந்த யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

g60jhimg

3. Virtual reality-யில் ஈடுபட்டுள்ள Vineet Kamboj-யின் ஒத்துழைப்புடன் Ayesha Singh அமைத்துள்ள Invasive Apparatuses மாறுபட்ட மின்னணு சாதனங்களில் உள்ள பாதுகாப்பான வெளியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

4. Nisha Rachel Philip-ன் Digi Plays Power-ல், இளைய தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் அளிக்கும் மயக்கத்தின் ஆபத்துகள் குறித்து holographic intelligent திரை கொண்டு விவரிக்கிறார்.

5.Amay Kataria-ன் Babble Wall மனிதர்களுடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து கேட்கும் ஒரு artificial intelligence கொண்ட sentimental bot ஆகும்.

6. கண்காட்சியில் Amay Kataria-வின்  இரண்டாவது பகுதியாக இடம்பெற்றுள்ள Figments of Attention, நம்மை நுகர்வும் வாங்கவும் வழிவகுக்கும் தொழில்நுட்பத்தின் மயக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

rnh2voc8

7. Yaazd Contractor & Rudradaman Singh ஆகியோரின் சொந்த ஊடாடும் விளையாட்டான Hiraeth- House/Home இடம்பெற்றுள்ளது. இது பத்து மினி-கேம்களை உள்ளடக்கியது.

8. இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள A2C2T (A2=Awareness & Archive, C2=Communication, Connectivity, T=Technology) மூலம், யோகா பயிற்சியாளரும் ஆசிரியருமான Praveen Maripelly  தொழில்நுட்பத்தை நினைவாற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் ஒருங்கிணைக்கிறார்.

9. Azra Bhagat-ன் படைப்பான Emote நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வழியில் emoticon-களின் தாக்கத்தை ஆய்வு செய்கிறது.

Comments

10. ஒலி, வீடியோ மற்றும் ஹாலோகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மல்டிமீடியா நிறுவலான Heaven 2.0, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, இது நமது எதிர்காலத்தில் நேரடி வரைபடத்தை விட்டுச்செல்கிறது. இதனை Sultana Zana படைத்துள்ளார்.
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT