NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்

கடந்த வாரம் நடைபெற்ற 'தி லேக்மே இந்தியா பேஷன் வீக்' நிகழ்ச்சியில் இந்த 'தி கிங்கோ லீஃப்' பிளாட்டினம் கலெக்சன் தன் அறிமுகத்தை பெற்றது.

அழகிய கைவினைத்திறனுக்ககாவும் மற்றும் வடிவமைப்புகளுக்காகவும் அறியப்படும் ஒரு பிரபல நகைக்கடை நிறுவனம் 'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்' என்கிற பெயர்களில் கைவினைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டு பிளாட்டினம் கலெக்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற 'தி லேக்மே இந்தியா பேஷன் வீக்' நிகழ்ச்சியில் இந்த  'தி கிங்கோ லீஃப்' பிளாட்டினம் கலெக்சன் தன் அறிமுகத்தை பெற்றது. நீழ்மீட்சி மற்றும் அழகின் அடையாளமாக கருதப்படும் கிங்கோ மரத்திலிருந்து உத்வேகம் பெற்று, இந்த 'தி கிங்கோ லீஃப்' கலெக்சன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் தைரியம் மற்றும் சொல்லப்படாத கதையை இந்த கிங்கோ லீஃப் பிரதிபளிக்கிறது.

16enka68

'புத்தா பாட்' கலெக்சன் என்பது கைவினைத் திறனால், பிளாட்டினத்தின் மேல் மென்மையாக் பதிக்கப்பட்ட வைரங்களை கொண்ட மிக அழகான ஆபரணத் தொகுப்பாகும். குணமாகும் பன்பியல்புகளை அதிகமாக கொண்டு திறந்த நிலையில் விதைகளை பரவலாக்குகின்ற, இதைய வடிவிலான தனித்துவமான புத்தா பாட் விதைகளிலிருந்து உத்வேகம் பெற்று இந்த கலெக்சன் உறுவாக்கப்பட்டுள்ளது.

1hhp8uh8

இந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உம்மிடி பங்காரு ஜிவல்லர்ஸின் நிர்வாக பங்குதாரர் ஜித்தேந்திரா உம்மிடி பேசுகையில் "இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கும் இரு அற்புதமான பிளாட்டினம் அணிவரிசைகளான 'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்' ஆகியவற்றை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெறுமையும் கொள்கிறோம்" என்று கூறினார்.

Comments
ts5ov87o

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலாட்டினம் கில்டு இன்டர்நேசல், இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வைசாலி பேனர்ஜி, இந்த தொகுப்புகள் குறித்து பேசுகையில்,"தி கிங்கோ லீஃப் மற்றும் புத்தா பாட், இந்த இரண்டு தொகுப்புகளுமே மிக நவீன வடிவமைப்பின் வழியாக ஒரு தனிச்சிறப்பான வடிவமைப்பு கதையை கொண்டிருக்கிறது. நேர்த்தி மற்றும் மேன்மையான அழகு ஆகியவற்றை ஒவ்வொரு ஆபரணமும் கொண்டிருக்கிறது." என்றார்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com