NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

'என் கடை பேனாவைத்தான் கலைஞர் பயன்படுத்தினார்!' - சுவாரஸ்யம் பகிரும் பிரதீப்

எழுத்துக்களாலும், வசனத்தாலும் தமிழ் மக்களைத் தன் பக்கம் ஈர்த்த கலைஞர் கருணாநிதி அவர்கள் GEMS & CO பேனாக் கடையில் தான் பேனா வாங்கியிருக்கிறார்

'என் கடை பேனாவைத்தான் கலைஞர் பயன்படுத்தினார்!' - சுவாரஸ்யம் பகிரும் பிரதீப்

பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ஒரு பெரிய மரத்தாலான பேனா தொங்கிக் கொண்டிருக்க சுற்றிலும் பல அழகான மற்றும் வித்தியாசமான பேனாக்கள் அடிக்கிவைக்கப்பட்டிருந்தக் கடையில் மூன்றாம் தலைமுறையாக GEMS & CO பேனாக் கடையை பழமை மாறாமல் நடத்திவரும் பிராதாப் கண்ணன் பேனாக்களை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் கலைஞர் பேனா வாங்கும் கடை இது தானே என்று கேட்டதும், ‘ஆம்’ என்று பேசத் தொடங்கினார். தன் எழுத்துக்களாலும், வசனத்தாலும் தமிழ் மக்களைத் தன் பக்கம் ஈர்த்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த GEMS & CO பேனாக் கடையில் தான் பேனா வாங்கியிருக்கிறார்.

1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை 90 வருடங்களாக இயங்கி வருவதால் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் இந்த கடையில் வந்து தங்கள் பேனாக்களை வாங்கி செல்கின்றனர் என்று கூறிய பிரதீப், ‘கலைஞர் உபயோகித்து வந்த பேனா பாம்பே பிராண்டான வாலிட்டி (Wality). அது எங்கள் கடையில் இருந்து தான் எப்போதும் போகும்’ என்று கூறினார்.

தொடர்ந்து, ‘பல முறை கலைஞர் அவர்களின் கையில் பார்த்த அந்த பேனாவின் விலை 300 ரூபாய். அந்த பேனா கனமாக இருப்பதால் எழுதுவதற்கு நன்றாக இருக்கும் இதுவே அந்த பேனாவின் தனித்துவம். பல வருடங்களாக ஒரு பேனாவை பயன்படுத்தி வந்தால் அந்த பேனாவிற்கும் மூளைக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அந்த பேனாவுடன் நமக்கு உணர்ச்சிகரமான தொடர்பும் ஏற்படுகிறது’ என்கிறார் பிரதீப்.

சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட கடை என்பதால் இங்கிலாந்திலிருந்து காமா(Gama) பேனாக்களை வாங்கியுள்ளனர். அதன் பின்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனாக்களை மட்டுமே விற்றுவருகின்றனர். ஃபான்ஸியான அழகான பேனாக்கள் சீன நாட்டு பேனாக்களில் இருந்தாலும். தரம் மற்றும் பயன்படுத்துவதற்கு பொருளாதார விதத்திலும் சிறந்த பேனாக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் காமா பேனாக்கள் என்று கூறிய அவர் 50 ரூபாயில் தொடங்கி 2000 ரூபாய் வரை இருக்கும் காமா பேனாக்களை விற்பதாக கூறுகிறார். அதற்கு மேல் விலையுயர்ந்த பேனாக்களையும் அவர்கள் ஆர்டர் செய்து வாடிக்கையாளர்களுக்கு வாங்கி கொடுகின்றனர்.

சென்னையில் வேறு எந்த கிளைகளும் இவர்களுக்கு இல்லை. பேனா வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிராட்வேயில் இருக்கும் கடையில் நேராக சென்று தான் வாங்க வேண்டும். கையால் தயாரிக்கப்படும் பேனாக்கள் இங்கு கிடைப்பதே இந்த கடையின் சிறப்பம்சம்.

அந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பேனாக்களை வாங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு பரப்பரப்பாக இருந்த கடை இப்போது குறைந்த வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தாலும் பலர் வெளியுறுகளிலிருந்து வந்து இந்த கடையில் பேனாக்களை வாங்கி செல்கின்றனர். பல பழைய வாடிக்கையாளர்கள் தங்கள் அந்த காலத்தின் நினைவுகளை மீட்டெடுக்க இந்த கடையில் வந்து அமர்ந்து செல்கின்றனர் என்று உணர்ச்சியுடன் கூறுகிறார் பேனாக்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட அந்த கடையின் உரிமையாளர் பிரதீப் கண்ணன்.

Comments

- மோனிகா பரசுராமன்



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT