NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பிரேக் வேணுமா..? - இந்த 3 விஷயத்த செய்யுங்க

தேவையற்ற சிந்தனைகள் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழக்க செய்யும்.

பிரேக் வேணுமா..? - இந்த 3 விஷயத்த செய்யுங்க

வேலை, நண்பர்கள், குடும்பம், பொறுப்புகள் என எல்லாமே சில நேரங்களில் காரணமின்றி நம்மை பெரும் விரக்தி நிலைக்கு தள்ளிவிடும். இதனால் மனம் சோர்வாகி நம் சந்தோஷத்தை இழக்க செய்யும். எதிலும் நாட்டமில்லாமல், இந்த வாழ்க்கையில் நாம் எதை சாதித்து விட்டோம், இன்னும் இருந்து என்ன பயன் போன்ற மனச் சோர்வு அவ்வப்போது உண்டாகும். தேவையற்ற சிந்தனைகள் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழக்க செய்யும். கவலை வேண்டாம்! அப்படியான சூழலில் நீங்கள் இருக்கத் தேவையில்லை. பையை எடுத்துக் கொண்டு பயணிக்க தயாராகுங்கள்!

பயணம் மேற்கொள்ளுங்கள்

நாட்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீங்கள் எங்காவது தூரதேசத்துக்கு பயணிக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதெல்லாம் நீங்கள் மன அழுத்தத்தை உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் எல்லாவற்றிலிருந்தும் சிறு விடுப்பு எடுத்துக் கொண்டு மலை, அருவி, அடர் காடுகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு புறப்பட்டு விடுங்கள். இயற்கையோடு மனம் ஒன்றிணையும் போது நமக்கு அது பெரும் மன நிம்மதியை தருவதோடு வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை உண்டாக்கும். இந்த பயணமானது உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் இருந்தால் இன்னும் சிறப்பு.

சமூக வலைதள தொடர்பை துண்டித்துவிடுங்கள்

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு நம்மிடையே அதிகரித்து விட்டது. செல்போன் இல்லாமல் ஐந்து நிமிடங்கள் கூட இருந்திட முடியாதவர்களாய் அடிமையாகிக் கிடக்கிறோம் நாம். ஒருவர் முகநூலில் தங்களின் துக்கம் மற்றும் மகிழ்வான தருணங்களை பதிவிடுவார்கள். இதனை பார்த்துக் கொண்டிருக்கும் நாம், நம் வாழ்வில் இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லையே என்ற விரக்தி நிலைக்கு தள்ளப் படுவோம். தேவையற்ற சிந்தனைகள் நம்மை சூழ்ந்து நம் நிம்மதியை, மன மகிழ்ச்சியை குழைத்துவிடும். மேலும், உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை மற்றும் சுய மதிப்பீடு இழந்து போகவும் வாய்ப்புள்ளது. அதனால், தற்காலிகமாக உங்களை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து துண்டித்துக் கொள்ளுங்கள்.

உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்

Comments

உங்களை உற்சாகப்படுத்தக் கூடியவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. நீங்கள் மனதளவிலோ உடலளவிலோ சோர்வாக உணரும் தருணங்களில் இந்தத் துடுப்பு சீட்டு உங்களுக்குக் கை கொடுக்கும். சொந்த ஊரிலே ஒரு பயணியை போல சுற்றித் திரிந்த அனுபவம் உண்டா? அது ஒன்றும் கடினமான விஷயமல்ல. அடிக்கடி நீங்கள் செல்லக்கூடிய இடங்களை தவிர்த்து புதியவற்றை தேர்வு செய்யுங்கள். புதிதானவை நமக்கு நிறைய அனுபவங்களையும் பாடங்களையும் நேர்மறையான எண்ணங்களையும் உருவாக்கித்தரும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT