NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

வேலையை தாமதமின்றி கச்சிதமாக முடிப்பதற்கு 4 டிப்ஸ்!

வேலையில் உள்ள பலர் தினந்தோறும் அனுபவிக்கும் ஒரு பிரச்னை, குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்காமல் இருப்பது தான்

கடமையை கச்சிதமாக முடிப்பதற்கு உதவும் டிப்ஸ்

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு வீட்டிலிருந்து வேலை (Work at Home) என்ற முறையில் தான் பெரும்பாலானோர் வேலை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அலுவலகம், பணியிடத்திற்குச் சென்று வேலை பார்த்து வருகின்றனர். 

இவ்வாறு வேலையில் உள்ள பலர் தினந்தோறும் அனுபவிக்கும் ஒரு பிரச்னை, குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்காமல் இருப்பது தான். பொதுவாக வேலையைக் கச்சிதமாக முடிப்பது என்பதே ஒரு கலை தான். அந்த வகையில், உங்கள் வேலையில் நீங்கள் கெட்டிக்காரராக இருப்பதற்கு நான்கு விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

1. கவனச்சிதறல்

வேலை செய்து கொண்டிருக்கும் போது, கவனச்சிதறல் ஏற்படக்கூடாது. செல்போன் பேசுவது, மெசேஜ் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இவ்வாறு வேலையில் இருந்து உங்களது எண்ணம் விலகி விட்டால், மீண்டும் வேலையில் ஈடுபடுவதற்கு சிரமம் ஆகி விடும். இதனால், கடைசி நேரத்தில் பரபரப்பாக வேலை பார்க்க வேண்டியிருக்கும். 

2. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். அவசரமாக முடிக்க வேண்டிய வேலையை முன்கூட்டியே கணித்து அதை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து மற்ற வேலைகளை சோர்வின்றி செய்ய வேண்டும்.

3. திட்டமிடல்

அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, முதல் நாளிலேயே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக திடீர் வேலைகளும் வரும். எனவே, எப்போதும் எதிர்பாராத வேலையை எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு வேளை அந்த நேரத்தில், வேலைகள் இல்லை என்றால், சிறிது ரீலாக்ஸாக இருக்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால், எப்போதும் ஒரு அரை மணி நேரம் அவசர வேலைக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

4. முடியாது என்று சொல்லுங்கள்

Comments

நீங்கள் ஒரு வேலையில் மும்முரமாக இருக்கிறீர்கள், அல்லது வேலைப்பளு சற்று அதிகமாக உள்ளது என்றால், மற்ற வேலைகளை எடுக்காதீர். அவ்வாறு யாராவது வேலை கொடுத்தால், நிலைமையை எடுத்துச் சொல்லி ஏற்க முடியாது என்று சொல்லிவிடுங்கள். மாறாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யக்கூடாது. அவசர உதவி, அவசர வேலைகள் வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT