NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

கடைகளில் விற்கப்படும் முட்டையை பச்சையாகக் குடிப்பது நல்லதா? கெட்டதா?

பச்சை முட்டைகளை தொடர்ந்து உட்கொண்டால், அது உங்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பச்சை முட்டைகளை சாப்பிடுவது நல்லதா இல்லையா என்பது பலருக்கும் கேள்வி எழுகிறது.

உலகின் ஆரோக்கியமான உணவுகளில் முட்டைகள் ஒன்றாகும், அவை பெரும்பாலும் சூப்பர்ஃபுட்களாக கருதப்படுகின்றன. அவற்றில் புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, செலினியம், பாஸ்பரஸ், ஃபோலேட், துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. 

இந்த ஊட்டச்சத்துக்கள் எல்லா வகையான முட்டைகளிலும் இருக்கும் - அது பச்சை முட்டை என்றாலும், அவித்த முட்டை என்றாலும் இருக்கம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கும் மக்கள் முட்டைகளை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடுகிறார்கள். ஆனால் பச்சை முட்டைகளை சாப்பிடுவது நல்லதா இல்லையா என்பது பலருக்கும் கேள்வி எழுகிறது.
 

பச்சை முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?
பச்சை முட்டைகளை சாப்பிடுவதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அதில்  சால்மோனெல்லோசிஸ் அல்லது சால்மோனெல்லா நச்சு இருப்பதாக  கூறப்படுகிறது. இது ஒரு வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவாகும், இது நமது செரிமானத்திற்கும் குடல் அமைப்பிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். இவை முட்டை செல்கள் அல்லது முட்டையின் திரவ பகுதியில் காணப்படுகின்றன.

cmnl55j8

நீங்கள் பச்சை முட்டைகளை தொடர்ந்து உட்கொண்டால், அது உங்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பச்சை முட்டைகளை உட்கொண்ட பிறகு மக்கள் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்னை ஃபுட் பாய்சன் ஆகும். இது வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடல்நலக்குறைவு மற்றும் குளிர் போன்ற தனிப்பட்ட அறிகுறிகளை உருவாக்கக்கூடும்.

பச்சை முட்டைகளின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?
அமெரிக்காவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயத்தைக் குறைப்பதற்கு நன்கு சுத்தம் செய்யப்பட்டு குளிரூட்டப்படுகின்றன. அட்டைப்பெட்டிகளில் வைத்து விற்கப்படும்  பாச்சர்செய்யப்பட்ட முட்டைகள் பச்சையாக உட்கொள்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது. பச்சை முட்டைகளில் சர்க்கரை சேர்ப்பது முட்டையின் வெள்ளை நிறத்தில் இருக்கும் தண்ணீரை பிணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த செயல்முறை பாக்டீரியா வளர்சிதை மாற்றத்தில் பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதேபோல், ஆர்கனோ மற்றும் தைம் போன்ற மூலிகைகள், பாக்டீரியா எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கும், இது பச்சை முட்டைகளில் உள்ள அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. .

Comments

எந்த நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், முட்டைகளை உட்கொள்ளும்போது எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT