NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உடல் நலன், மன நலன் காக்க 6 வழிமுறைகள்

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆறு வழிமுறைகள் உங்கள் கவனத்திற்கு - 6 Tips To Lead A Healthy, Balanced Lifestyle

உடல் நலன், மன நலன் காக்க 6 வழிமுறைகள்

பரபரப்பான வாழ்க்கை சூழலில் உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதென்பதே பெரிய சவாலாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்த வரையில், ஒன்று அதிகபடியாக அக்கறை எடுத்து கொள்வோம் அல்லது ஆரோக்கியம் பற்றி துளியும் கவலை கொள்ளாமல் இருப்போம். இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் பயணிப்பதை தான் நாம் கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டியது. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆறு வழிமுறைகள் உங்கள் கவனத்திற்கு.

சாப்பாட்டில் கவனம் செலுத்துங்கள்

உங்களுக்கு பசி உணர்வு இருந்தால் மட்டுமே சாப்பிடுங்கள். கோபம், மன அழுத்தம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சி கலவையில் நீங்கள் சிக்கியிருந்தால், சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் உங்கள் உணர்ச்சி நிலை சீராக இல்லாதபோது நீங்கள் எவ்வளவு உணவு உட்கொள்கின்றீர்கள் என்பது உங்களுக் கே தெரியாது. அதேபோல டிவி பார்த்து கொண்டோ அல்லது சமூகவலைதளத்தில் ஏதேனும் பதிவுகளை படித்துக் கொண்டோ சாப்பிட வேண்டாம். சாப்பிடும் போது உங்கள் முழு கவனமும் சாப்பாட்டில் மட்டுமே இருக்கட்டும்.

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் வேலைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதை போல உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதனால், உங்கள் உடலுடன் சேர்த்து மனமும் ஆரோக்கியம் அடையும். உடற்பயிற்சி செய்வதனால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

உணவை தவிர்க்காதீர்கள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, சாப்பாட்டை தவிர்ப்பது முட்டாள்தனம். நீங்கள் பட்டினியாக இருப்பதால், உங்கள் உடலுக்கு தேவையா ன சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு, உங்கள் உணர்ச்சி நிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். பசியுடன் இருக்கும்போது கோபம் அதிகமாக வரும். மேலும், பசியுடன் சாப்பிடாமல் இருந்து, அடுத்த வேளை நீங்கள் சாப்பிடும்போது, அளவுக்கு அதிகமாகவே உணவை எடுத்துக் கொள்வீர்கள். அதனால், பட்டினியாக இருக்காமல், புரதம் நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் அருந்தலாம்

காலை உணவுடன் பழச்சாறு குடிப்பது அல்லது மதிய உணவுடன் சோடா குடிப்பது போன்றதை தவிர்த்து, நிறைய தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் உடலில் நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். உடலை சுத்தம் செய்வதில் தொடங்கி, நம் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏராளமான நன்மை பயக்கக்கூடியது.

துரித உணவுகளை தவிர்த்திடுங்கள்

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எத்தனையோ வகையான உணவுகள் நம்மை சுண்டி இழுக்கத்தான் செய்கிறது. கண்களை கவரும் வகையில் இருந்து, நாவை அடிமையாக்கி விடுகின்றன இன்றைய உணவுகள். துரித உணவுகளில் டேஸ்ட் மேக்கர் கலக்கப்படுவதால் அவை அதீத ருசியாக இருக்கிறது. மேலும் சாக்லேட் போன்ற இனிப்பு பண்டங்களில் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுவதால் இந்த உணவுகள் உடலுக்கு முற்றிலுமாக தீங்கு விளைவிக்க கூடியது. அடிக்கடி இப்படியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Comments

அளவாக சாப்பிடுங்கள்

உங்கள் மேஜையில் பலவகை உணவுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு மேலோங்கும். அதன் விளைவாக, அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடலாம். அதனால், உணவு விஷயத்தில் மனதை கட்டுப்பாடாக வைத்திருங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT